உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார்: அறிவித்தது ரஷ்யா

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார்: அறிவித்தது ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இன்று ரஷ்யா வெளியிட்ட ஒரு அறிவிப்பு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து பயன்படுத்த தயார் உள்ளதாக கூறியுள்ளது அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோயாக புற்றுநோய் மாறி உள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கணக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு என உலகளவில் ஆராய்ச்சி நடந்த வண்ணம் உள்ளன. தனியார் நிறுவனங்களும் ஆய்வு செய்து வந்தன.சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் அறிவித்து இருந்தார்.இதனிடையே பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் பயோலஜிக்கல் ஏஜென்சி அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா கூறியதாவது: பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவில் கடந்த 3 ஆண்டு மருத்துவ பரிசோதனையில் இருந்தது. தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது. நோயின் முக்கியத்துவத்தை பொருத்து, புற்றுநோய் கட்டி விரைவில் அளவு குறைவதுடன் குணமடையும வேகமும் 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கிறது.மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

karuththuraja
செப் 08, 2025 04:52

ரஷ்யர்களுக்கு மிகவும் நன்றி, பெருங்குடல் புற்று நோயாளிகளுக்கும் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு ஆறுதல் தரும் செய்தி, விரைவில் இந்தியா வந்தால் மகிழ்ச்சி.


Chitra Rengarajan
செப் 07, 2025 19:38

சீக்கரம் இந்தியாவுக்கு கொடுங்கள்


பெரிய ராசு
செப் 07, 2025 19:07

நன்றி ரஷியர்களே வாழ்க உங்கள் சேவை


Abdul Rahim
செப் 07, 2025 18:21

உலகிற்கு நல்லதொரு செய்தி கோடிக்கணக்கான உறவுகளை இழந்து பரிதவிக்கும் மனித சமுதாயத்திற்கு அருமருந்தாய் வாய்த்த இந்த செய்தி இனி பல உயிர்களை காப்பாற்றட்டும் புற்று நோயற்ற புதிய உலகம் பிறக்கட்டும் ஆராய்ச்சியாளர்களுக்கு கோடி வணங்கங்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை