உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அறிமுக நிகழ்ச்சியில் மேடையிலேயே சரிந்து விழுந்த ரஷ்ய ஏஐ மனித ரோபோ; வீடியோ இணையத்தில் வைரல்

அறிமுக நிகழ்ச்சியில் மேடையிலேயே சரிந்து விழுந்த ரஷ்ய ஏஐ மனித ரோபோ; வீடியோ இணையத்தில் வைரல்

மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த அறிமுக நிகழ்ச்சியின் போது மேடையில் தடுமாறி கீழே ரஷ்யாவின் முதல் மனித உருவிலான ஏ.ஐ. ரோபோ சரிந்து விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி விமர்சனத்தை கிளப்பியுள்ளது.ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலேயே தடுமாறி விழுந்தது. மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், AIdol என்று பெயரிடப்பட்ட மனித உருவிலான ஏ.ஐ., ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. 'ராக்கி' திரைப்படத்தின் இசை பின்னணியில் ஒலிக்க, ரோபோ மிகவும் மெதுவாக மேடையில் நடந்து வந்து, கூட்டத்தினரைப் பார்த்துக் கை அசைத்தது. பின்னர் சில நிமிடங்களில் ரோபோ தடுமாறி கீழே சரிந்து விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. தொழில்நுட்பம் குறித்து விமர்சனம் கிளம்பி உள்ளது. இது ரோபோவை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்துள்ளது.ரோபோ கீழே விழுந்ததும் அருகில் இருந்த ஊழியர்கள் உடனே மேடைக்கு ஓடிச் சென்று சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை.ரோபோவை உருவாக்கிய ரஷ்ய ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஐடலின் தலைமை நிர்வாக அதிகாரி விளாடிமிர் விதுகின், இந்த தவறு ஒரு அனுபவமாக மாறும் என கூட்டத்தில் இருந்தவர்களிடம் சமாளிக்கும் வகையில் பேசினார்.எலான் மஸ்க் டெஸ்லா மாநாட்டில் தனது ரோபோவுடன் ஆடிய வீடியோ வைரலானதை அடுத்து, ரஷ்ய ரோபோ விழுந்த இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எலான் மஸ்கின் பழைய ரோபோ வீடியோக்களுடன் ஒப்பிட்டு இது தான் ரஷ்யாவின் தொழில்நுட்ப திறனா என நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். ரோபோ கீழே விழுந்த வீடியோவை பதிவிட்டு ஏராளமானோர் விமர்சித்து இருந்தாலும், ஒரு சிலர் ரோபோவை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல என கருத்து பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி