உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவூதியில் முடிவுக்கு வந்தது கபாலா நடைமுறை; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இனி நிம்மதி

சவூதியில் முடிவுக்கு வந்தது கபாலா நடைமுறை; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இனி நிம்மதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கபாலா என்ற தொழிலாளர் நடைமுறையை சவூதி அரேபியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு உடல் உழைப்பை முன் வைத்து பல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்தியாவில இருந்து மட்டுமல்ல தெற்காசியாவில் இருந்தும் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பான்மையோர் இந்தியர்கள். இதை தவிர்த்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை நாடுகளில் இருந்தும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு என கபாலா என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.வளைகுடா நாடுகளில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் ஒருமுறை தான் கபாலா. ஸ்பான்சர்ஷிப் என்பதற்கான அரபு மொழிச் சொல் தான் கபாலா.இந்த நடைமுறை மூலம், முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள் மீது முழு ஆதிக்கம் செலுத்தலாம். அவர்களின் விசா, பயணம், தங்கும் இடம், உணவு செலவுகள் உள்ளிட்டவற்றை ஸ்பான்சர் (கபீல் என்று அழைக்கப்படுபவர்) செய்பவர் ஏற்றுக் கொள்வார்.தொழிலாளர்கள் தமது விருப்பப்படி சொந்த நாடு அல்லது ஊருக்கு திரும்பவோ அல்லது பணியை மாற்றவோ முடியாது. 1950ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கபாலா நடைமுறையின் மூலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. பல வருட ஆய்வுகள், சீர்சிருத்தங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த நடைமுறையை நீக்குவதற்கான முடிவை தற்போது சவூதி அரேபியா எடுத்துள்ளது. சவூதியில் உள்ள மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். கட்டட வேலை, வீட்டு பணியாளர், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக வந்துள்ளவர்கள். மேலும் கபாலா முறை ஒழிப்பு என்பது இளவரசர் முகமது பின் சல்மானின் தொலைநோக்கு திட்டம் 2030 என்பதின் ஒரு பகுதியாகும். கபாலா ஒழிப்பு மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் ஸ்பான்சர் செய்வரின் ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். தங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமலேயே வேலைகளை மாற்றிக் கொள்ளவும் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

android meera
அக் 23, 2025 13:20

சவூதி அரேபியாவில் கஃபாலா முறை முற்றிலும் நிறுத்தமா? உண்மை என்ன?ஸ்பான்ஸர் இல்லா சவூதி விசா / பிரீமியம் ரெசிடென்சி விசா என்பது என்ன? எல்லோருக்கும் கிடைக்குமா? தற்போது 2025 ஆம் ஆண்டில், கஃபாலா ஸ்பான்சர்ஷிப் முறை கிவாQIWA தளத்தில் ஒப்பந்த முறைContract மூலம் முறையாக நெறிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி இதில் பெரிய அளவில் மாற்றமில்லை. இது தவிர்த்து சிலர் ஸ்பான்ஸர் இல்லா சவூதி விசா / பிரீமியம் ரெசிடென்சி விசா பெறலாம்...


K r Madheshwaran
அக் 23, 2025 07:24

அடிமைகளுக்கு உரிமை இஸ்லாம் கொடுத்தது என்றால் இஸ்லாம் பிறந்தது எப்போது இந்த சில வருடங்களிலா அப்படி என்றால் இதுவரை அங்கு இஸ்லாத் இல்லையா மேலும் ஒரு மதம் ஒரு மனிதனை அடிமை என்று எப்படி முடிவு செய்கிறது அப்படி ஒரு கடவுள் பிறப்பான மனித குலத்தை அடிமைகள் என்று சொல்வது பிரிப்பது எப்படி ஒரு பரந்து விரிந்த மதமாக புகழ முடியும்


murasan987
அக் 23, 2025 00:12

ஏதோ சவூதிக்கு போனது போல கதை விடுற தம்பி அங்கு விவேகானந்தர் குறுக்கு சாலை எங்கிருக்கிறது தெரியுமா? யார் ஓடின உனக்கென்ன உன்னுடைய துப்பட்டியை கவனமாக பிடித்துக் கொள்


தாமரை மலர்கிறது
அக் 22, 2025 22:50

ஏதோ மனிதாபிமானத்தால், சவுதி இந்த முடிவுக்கு வந்ததாக தவறாக எண்ணவேண்டாம். உலக அளவில் மக்கள்தொகை குறைகிறது. அதனால் திறமையான வேலையாட்களுக்கு கடும் திண்டாட்டம் நிலவுகிறது. சவுதியில் பாதிபேர் வெளிநாட்டுக்காரர்கள். அதனால் தான் பழைய சட்டங்களை திருத்துகிறது. சீனாவின் வளர்ச்சியால், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பிரேசில், சிலி என்று அனைத்து தெற்குலக நாடுகள் வளர்கிறது. பிரிட்டனின் தொழிற்புரட்சியால் மேலை நாடுகள் வளர்ந்தன. இப்போது சீனாவின் டூல்கள், இயந்திரங்களை உபயோகப்படுத்தி தெற்குலகம் வளர்கிறது. மேலும் சீனா பலநாடுகளில் ரயில்வே, ரோடுகள், போர்ட்கள், ஏர்போர்ட்கள் உருவாக்கி அந்த நாட்டின் தொழிற் உற்பத்தியை பெருக்கி உள்ளது. பழைய இந்தியாவில் தெருவுக்கு ஒருவர் சவுதியில் குப்பை கொட்டினார். இப்போது யாரும் சவுதிக்கு போகவிரும்புவதில்லை. சட்டத்தை திருத்தோணும் ஷேக்கு .


Saai Sundharamurthy AVK
அக் 22, 2025 19:34

நிறைய தொழிலாளர்கள் ஏதோ பெரிய சம்பளம் வாங்கி முன்னேறி விடலாம் என்கிற பேராசையில் கனவு கண்டு அந்த நாடுகளில் போய் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படி சிக்கியவர்களில் பட்டதாரிகளும் அடங்குவர். ஆடு மேய்ப்பது, ஒட்டகம் மேய்ப்பது, புல்லு கட்டுகளை கொடவுனில் அடுக்கி வைத்து, அவர்களுக்கு உணவளித்து துப்புரவு பணிகள் செய்வது போன்ற வேலைகளில் அமர்த்தப்படுவார்கள். இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது, என்னை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கோரினால், அந்த உரிமையாளர் லேசில் விட மாட்டார். பாஸ்போர்ட் வேறு அவரது கையில் சிக்கி விடுவதால் ஒரு ஐந்து வருடங்களாவது வேலை வாங்காமல் விட மாட்டார். உணவு, இருப்பிடம் இலவசம் என்றாலும் சம்பளமும் குறைவு தான். அதை வாங்குவது கூட மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். வாழ்க்கை ஐயோ பாவமாகி விடும். இந்தியாவில் அவரது மனைவி, குடும்ப உறுப்பினர்கள் போன் செய்தால் அவர்களை சமாளிக்க வேறு ஏதாவது பொய்க் காரணங்களை கூறி, திராவிட உருட்டுகள் மாதிரி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டும். கொடுமையிலும் கொடுமை....! இந்தியர்களின் நிலைமை இப்படியென்றால், பாகிஸ்தான், பங்களாதேசிகளின் நிலைமை வேறு விதம். அந்த ஐந்து வருடத்தில் இவர் இனிமேல் திரும்பி வரவே மாட்டார் என்று எண்ணி அவர்களின் மனைவிமார்கள் வேறு ஒருவருடன் ஓடி விடுவார்களாம். வளர்ந்த பெண் பிள்ளைகளும் யாரையாவது திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு போய் விடுவார்களாம். குடும்பம் அல்லோலப்பட்டு போய் விடுமாம். பிலிப்பைனிகளோ இது தாண்டா சாக்கு என்று வேறு ஒரு பெண்ணை செட்டப் செய்து கொள்வார்களாம். முதல் மனைவி பிலிப்பைனில் இருந்து ராக்கெட் விட அதற்கு பதிலடியாக அந்த செட்டப் எதிர் ராக்கெட்டை ஏவி விட, அதை இவர் இஸ்ரேல் - ஹமாஸ் போர் என்று கம்மென்ட் அடிக்க, அங்குள்ள இந்தியர்களுக்கு ஒரு நகைச்சுவை காட்சி தொடர் கிடைத்தது போல் இருக்கும். பொறியியல், தொழில் நுட்பம் படிக்காமல் போகும் தொழிலாளர்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் விளைவுகள் மோசமாகிப் போகும். இந்த சட்டத்தை சவுதி அரசு இப்போது நீக்கியிருப்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம் தான் என்று சொல்ல வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2025 13:43

அவங்களே திருந்தறாய்ங்க .... ஆனா .......


Rengaraj
அக் 22, 2025 13:42

இங்கிருந்து அங்கு வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த கண்ணியத்துடனும் அந்த நாட்டு சமூக ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் எல்லோரும் இல்லை இங்கு திரும்பிவந்தவுடன், தங்கள் அங்கு கடைபிடித்த சமூக கட்டுப்பாடுகளை மறந்து விடுகிறார்கள். வெளிநாடு சென்று திரும்பி வந்தவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணாமாக வாழ்ந்து நம்நாட்டிலும் நல்ல விஷயங்களை இந்த சமூகத்துக்கு சொல்லித்தரும் அளவுக்கு நடந்துகாட்ட வேண்டும். அவர்களை பார்த்து மற்றவர்களும் மாற ஆரம்பித்தால் நல்லதுதானே


Madras Madra
அக் 22, 2025 12:30

அப்படியே பெண்களுக்கு சம உரிமையும் வழங்குங்கள்


Haja Kuthubdeen
அக் 22, 2025 14:24

உங்களுக்கு அரபுநாட்டுப் பெண்களை பற்றி தெரியாமல் இருக்கலாம்.அங்கே ஆண்களை விட பெண்களுக்கே அதிக அதிகாரம்.குடும்ப நிர்வாகம் முழுக்க அவர்கள் கையில்.தற்காலத்தில் ஏகப்பட்ட பெண்கள் அரசு வேலைகள் காவல்துறை குடியேற்ற அலுவலகம் மருத்துவ துறையில் பணி செய்கிறார்கள்.


Rathna
அக் 22, 2025 10:56

1500 வருடங்களாக போரில் வென்ற, கடத்தி வரப்பட்ட யூதர்கள், ஆப்பிரிக்கர்கள், பெண்கள் போன்றவர்களை உரிமை இல்லாமல், பேசப்பட்ட சம்பளம் தராமல், மிக கடுமையான சூழலில் வேலை வாங்குவது, பெண்களை, குழந்தைகளை பாலியல் கொடுமை செய்வது தான் இந்த முறை. இதநாள் இறந்து போனவர்கள், அங்கேயே புதைபட்டவர்கள் பல ஆயிரம் பேர். அது தெரியமல் இங்கே ஜை ஹோ போட ஒரு கூட்டம் கூச்சல் போடுவது வருத்தமே..


Haja Kuthubdeen
அக் 22, 2025 14:34

ஆஹா..என்ன ஒரு அறிவு..19ம் நூற்றான்டு வரை உலகம் முழுதுமே இந்த அடிமைகள் பிரட்சினை இருந்துள்ளது.இந்தியாவில் ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்.பல பல நாடுகளுக்கு சுரங்க விவசாய வேலைகளுக்கு அடிமைகளாக கொண்டு சென்ற வரலாறு உண்டு..ஆப்ரிக்க மக்களை ஐரோப்பியர்கள் எப்படியெல்லாம் அடிமையாக வைத்திருந்தார்கள் என்பதாவது தெரியுமா?? அடிமைகளுக்கு சுதந்திரமும் உரிமையும் கொடுக்கனும் என்று விதி உண்டாக்கியது இஸ்லாம்.


Haja Kuthubdeen
அக் 22, 2025 10:53

மிகவும் அற்புதமான சிறந்த முடிவு... பிற நாடுகளான யுஏஇ.. கத்தார்.. குவைத்.. ஒமன்.. பஹ்ரைன் போன்ற நாடுகளும் இதை பின்பற்றனும்.


Shriram
அக் 22, 2025 11:14

பஹ்ரைனில் தொழிலாளர்கள் பாதுகாக்க இந்த சட்டங்கள் பல காலங்களாக நடைமுறையில் உள்ளது. வளைகுடா நாடுகளில் இதை நீண்ட காலமாக இதை செயல்படுத்தி வருவது துபாயும், பஹ்ரைனும் தான்.


Kalyan Singapore
அக் 22, 2025 11:21

யுஏஇ.. .. குவைத்.. ஒமன்.. பஹ்ரைன் போன்ற நாட்டுகளில் இந்த கபாலா முறை பல வருடங்களாகவே இல்லை என நினைக்கிறேன் .


Haja Kuthubdeen
அக் 22, 2025 14:15

கபாலத் முறை அரபு நாடுகளில் உண்டு..குறிப்பா யுஎயில் இப்பவும் உண்டு...