உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை விசாவை நிறுத்தியது சவுதி

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை விசாவை நிறுத்தியது சவுதி

ரியாத்: இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை மேற்காசிய நாடான சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் உள்ளன. கடந்த மாதமே துவங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.வேலை விசாவை தவிர, இ - விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.ஹஜ் காலம் நடைபெற்று வருவதால், இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதை தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.கடந்தாண்டில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மற்ற விசாக்கள் வாயிலாக வந்தவர்கள், ஹஜ் பயணத்தில் சட்டவிரோதமாக பங்கேற்றனர். அதையடுத்து, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anand
ஜூன் 10, 2025 10:59

அவனவன் நாட்டு பாதுகாப்பிற்கு முயற்சிகள் மேற்கொள்வது நல்லது விஷயம், அதுபோல இங்குள்ள கள்ளக்குடியேறிகளை காலம் தாமதிக்காமல் வெளியேற்றி நம் நாட்டு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்..


Nallavan
ஜூன் 10, 2025 08:35

சில கருத்துக்களில் சொற்கள் நாட்டின் அமைதியையும், ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய உணர்வு பாதிக்கும் வகையில் இருந்தால் ஜனநாயக நாட்டில் அந்த வார்த்தைகள் தவிர்ப்பது, அல்லது தணிக்கை செய்வது முக்கியம் , அப்படி செய்தல் அவர்களுக்கு நன்றி


S.L.Narasimman
ஜூன் 10, 2025 08:01

வெளிநாட்டினர் வருவது, கள்ள குடியேறுவதை தடுக்க சவுதி தன் நாட்டின் பாதுகாப்பு கருதி அனுமதி தடை விதிப்பது சரியானதே. அது போன்று மற்று அனைத்து நாடுகளும் செய்வது இன்றைய கால நிலையிக்கு தேவையானதே.


rama adhavan
ஜூன் 10, 2025 07:20

அங்கு வழிபாடு சம்பந்தமாக மட்டும் இந்தியர்கள் போகட்டும். ஏன் வேலைக்கு போக வேண்டும். என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?


m.arunachalam
ஜூன் 10, 2025 08:27

என்ன வளம் உள்ளது ? யார் கட்டுப்பாட்டில் உள்ளது ? பல படிநிலைகளில் வளமையும் செழுமையும் பகிர்ந்து கொள்ளபடுகிறது . யதார்த்தம் இங்கு நல்ல விதத்தில் இல்லை .


Seekayyes
ஜூன் 10, 2025 05:55

அது ஒரு நாடு, துலுக்கனை தவிர வேற யாரும் போககூடாத நாடு சவுதி. தீவிரவாதத்தின் பிறப்பிடம்.


Velantex Ram
ஜூன் 10, 2025 06:21

இது தவறான கருத்து, அவர்களின் நாட்டின் பாதுகாப்புக்கு கட்டுப்பாடு விதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு


Dhait Branch
ஜூன் 10, 2025 15:47

நீ மனிதன் கிடையாது மிருகம் ஈன பிறவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை