உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூதாட்ட செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி; தலைமறைவு நபர் துபாயில் கைது!

சூதாட்ட செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி; தலைமறைவு நபர் துபாயில் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: மகாதேவ் சூதாட்ட செயலி மூலம், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு துபாயில் பதுங்கி இருந்த சவுரப் சந்திராகர், இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.வட மாநிலங்களில், 'மகாதேவ்' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியில் சேர்ந்த லட்சக்கணக்கானோர், தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, விசாரணையை முடுக்கிய அமலாக்கத் துறை, கடந்த மாதம் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. மும்பை, கோல்கட்டா, போபால் உட்பட, 39 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல மாநிலங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. செயலியின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், முக்கிய குற்றவாளி துபாயில் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இன்று(அக்.,11) சவுரப் சந்திராகர் என்பவர், இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவர் சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்கள் மூமல் மக்களை ஏமாற்றி, ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளார் என்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் சந்திராகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Dharmavaan
அக் 11, 2024 21:01

கோர்ட் குற்றவாளிக்கு பரிவு காட்டினால் எவனும் பிடிபட மாட்டான் அப்பாவிக்குத்தான் தண்டனை நீதியின் கேவலம் இந்நாட்டில்


RAMAKRISHNAN NATESAN
அக் 11, 2024 19:39

துபையில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது யாரு ?? மர்ம மனிதர்களா ??


என்றும் இந்தியன்
அக் 11, 2024 18:30

மிக்க எருமையான் செயல். அந்த ரூ 5000 கோடி எங்கே அதை மீட்டு அரசு கருவூலத்திற்கு மாற்றி பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று ஒரு நாளாவது செய்தி வருமா???இல்லவே இல்லை??? கைது??நீதிமன்றம்? ஜெயில் விசாரணை ???ஜாமீன் இவ்வளவு தான் நடக்கின்றது இந்தியாவில்


SHANMUGAM SRINIVASAN
அக் 11, 2024 14:54

I immediately arrest


வாய்மையே வெல்லும்
அக் 11, 2024 14:47

ஐயாயிரம் கோடி மோசடிநடக்கிறவரைக்கும் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியது. திருடன் வெளிநாட்டுக்கு தப்பிப்பான். பிறகு வாலைவிட்டு தும்பை புடிச்ச கதை இந்தியாவில் அடிக்கடி நடக்கும் சம்பவம். இதற்கு எண்டு கார்டே இல்லையா? அரசர்கள் திருடனை முளைக்கும்போதே கிள்ளியெறியாவிட்டால் பிரச்சனை பூகம்பம் ஆகி அதை கட்டுப்படுத்துவதில் என்ன பிரயோசனம் ?


sundarsvpr
அக் 11, 2024 14:21

சூதாட்டம் நடுத்துவரின் குடும்பம் அறியாமல் இருக்காது. குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன தண்டனை.? ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி வேடவனாய் இருந்தபோது தப்புகள் செய்தார். தப்பில் கிடைத்த பணத்தை குடும்ப உறுப்பினர் அனுபவித்தனர். ஆனால் தவறு செய்தது வேடுவன் என்று கூறி பாவத்தை ஏற்க ஒப்பவில்லை.. நீதிமன்றம் தக்க அறிவுரை கொடுக்கவேண்டும். சூதாட்டம் நடத்துபவர் மற்றும் சூதாட்டத்தில் கழுந்துகொண்டவர்கள் குடும்பத்தினிற்கு தண்டனை உண்டா என்பது.


Sudha
அக் 11, 2024 13:59

இவனுக்கு எத்தனை பெண்டாட்டி? இந்த நாட்டில் இவனுக்கு யாரும் இல்லையா? இத்தனை நாளாய் இவனை மடக்க எந்த வழியும் இல்லையா? 5000 கோடி- என் வாழ்நாள் வருமானம் + சொத்து 5 கோடி இருக்குமா தெரியவில்லை. வயிறு எரிகிறது


Lion Drsekar
அக் 11, 2024 13:38

துபாய் என்றால் தூக்குதான் இங்கேயாக இருந்தால் மாண்புமிகு வந்தே மாதரம்