உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பை பேணுங்கள்: அமெரிக்கா, ஐ.நா., வலியுறுத்தல்

இந்தியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பை பேணுங்கள்: அமெரிக்கா, ஐ.நா., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்'' என ஐ.நா., வலியுறுத்தி உள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்களை அதிகரிக்க வழிவகுத்தது. அதன் பின்னர், இரு நாடுகளும் வர்த்தகத்தையும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் சிம்லா ஒப்பந்தம் போன்ற பல ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ''இந்தியாவும், பாகிஸ்தானும் பதட்டங்களைத் தணிக்க வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளும் பதட்டங்களைத் தணிக்க வலியுறுத்தினார்.பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மார்கோ ரூபியோ தனது வருத்தத்தை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்க அமெரிக்காவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார். விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பாகிஸ்தானை ரூபியோ கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு

இதற்கிடையே, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கவலை தெரிவித்த அன்டோனியோ குட்டெரெஸ், ''எந்தவொரு மோதலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்' என்று எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

India our pride
மே 01, 2025 12:49

ஐ.நா ஒரு உபயோகம் இல்லாத ஆணி. அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 1948 இல் பாக்கிஸ்தான் ரசாக்கர்ஸ் மற்றும் பாகிஸ்தானிய ஜிஹாதிகளை கொண்டு ஜம்மு & காஷ்மீர் மீது படை எடுத்து மற்றும் POK ஐ ஆக்ரமித்தபோது அப்போதைய பிரதமர் நேரு தேவை இல்லாமல் அதை ஐ.நாவிற்கு கொண்டு சென்று பன்னாட்டு பிரச்சனையாக மாற்றினார். பட்டேலின் வார்த்தையை கேட்கவில்லை. ஆக்ரமித்த காட்டுமிராண்டியை விரட்டாமல் அதை பன்னாட்டு பிரச்சனையாக மாற்றியது ஐ.நா.


India our pride
மே 01, 2025 12:42

நமது அரசு அளிக்க வேண்டிய பதில்கள். 1. பாகிஸ்தானியர்களுக்கு, ஏன் விசா வழங்குகிறது? 2. அவர்களுடன் ஏன் திருமண உறவை விசா மூலம் ஆதரிக்கிறது 3. எதற்கு எதிரிகளுடன் வியாபாரம் செய்ய வேண்டும்? 4. LOC மூலம் வியாபாரம் செய்து ஏன் ஹவாலாவை ஊக்குவிக்க வேண்டும்? 5. டெல்லியில் மட்டும் 5000 பாகிஸ்தானியர்கள் உள்ளதாக வெளியுறவுத்துறை கூறுகிறது. அவர்கள் டெல்லியையே எரிய வைக்க முடியும். அதுதான் CAA போராட்டத்தின் போது நடந்தது. 6. பிரச்சனை வந்தவுடன் மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு இன்னும் 15 நாட்களின் தூக்கத்தில் ஆழ்ந்தால் பாரதத்தை யாரும் காப்பாற்ற முடியாது. இது தான் உண்மை.


Ramesh Sargam
மே 01, 2025 11:48

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு பேணுவதா? மயிலிடம் போய் மயிலே மயிலே ஒரு இறகு கொடு என்றால் அது கொடுக்குமா? தயவு தாட்சண்யம் பார்க்காமல் நாம்தான் பிடிங்கிக்கொள்ளவேண்டும்.


Haja Kuthubdeen
மே 01, 2025 10:56

ஆயுதங்கள் விற்று காசு பார்க்கும் ஆசையில் உள்ளவர்கள் இதற்கு மேலும் பேசுவார்கள்.பாதிக்கபட்டவனையும் ..பாதிப்புக்கு காரணமானவனையும் சமமா பார்கிறானுங்க...


Gokul Krishnan
மே 01, 2025 10:52

சீனாவை போல் இஸ்ரேலை போல் ஐ நா சபையை மதிக்காமல் மிதிக்க வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
மே 01, 2025 09:49

தீவிரவாதத்தை கண்டிக்கவே மாட்டாங்க ........


Naga Subramanian
மே 01, 2025 09:27

போட்டு தாக்கி, பாகிஸ்தானை உலக வரைபடத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வைக்க வேண்டும். கடந்த 70 வருடங்களுக்கு மேலாக எத்தனை எத்தனை தீவிரவாத செயல்கள். இதற்கு முடிவு காட்டியே ஆகவேண்டும்.


thehindu
மே 01, 2025 09:10

நாட்டுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம் . இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாகத்தான் மதிப்பிடுகிறார்கள் . டிரில்லியன் டாலர்களை இழந்தும் நாட்டை விற்றும் கூட நாட்டின் கவுரவம் மதிப்பு சுதந்திரத்துக்கு முன்னாள் இருந்த நிலைக்கு சென்றுவிட்டது


அப்பாவி
மே 01, 2025 08:19

பாகிஸ்தானுக்கு கடனுக்கு தளவாடங்கள் விக்க இப்பவே கியூ நிக்கிதாம்.


RAMAKRISHNAN NATESAN
மே 01, 2025 09:48

வாங்கறதுக்கு நீங்க கடன் குடுங்க ...


Kumar Kumzi
மே 01, 2025 10:19

நீ எதுக்கு இருக்க போயி பாகிஸ்தானுக்கு போராடு தேசத்துரோகி


குணசேகர்
மே 01, 2025 08:18

இது போருக்கான நேரமில்லை ஹைன்னு அவிங்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.


சமீபத்திய செய்தி