உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பார்லிமென்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சி; வங்கதேசத்தில் நீடிக்கும் பதட்டம்

பார்லிமென்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சி; வங்கதேசத்தில் நீடிக்கும் பதட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் பார்லிமென்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பதட்டம் நீடிக்கிறது. ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி, ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்து கொன்று, அவர் உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்தது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், வங்கதேசமே கலவர பூமியாக காட்சியளித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ggo7sym5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல் முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பார்லிமென்ட் வளாகம் உள்பட டாக்காவின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இதனால், பல இடங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். பல பகுதிகள் இன்னும் பதட்டமாகவே உள்ளன.இதனிடையே, கொல்லப்பட்ட ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று இறுதி மரியாதை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த நிலையில், பார்லிமென்ட் வளாகம் முன்பு குவிந்து வரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சந்திரன்
டிச 20, 2025 22:07

ஆட்டை கடித்து மாட்டை கடித்து ஒட்டகத்தை கடித்த இவர்கள் இனி மனிதர்களை கடிக்கக்கூடிய சைத்தான்களாக மாறிவிட்டனர் இத்தகைய மத வெறி பிடிச்ச கூட்டம் தங்களை தாங்களே அழித்துக் கொள்வார்கள்


Kannan Chandran
டிச 20, 2025 20:56

மத பழமைவாதிகள் கையில் உள்ளது தற்பொழுதைய பங்காளதேஷ், அழிந்தால் ஒழிய அவர்கள் திருந்தவோ திருத்தவோ வழியில்லை..


Veluvenkatesh
டிச 20, 2025 20:48

மூடர்களின் முழங்காலுக்குள் மூளையை ஏன் வைத்தாய் எங்கள் ஏக இறைவனே?


Ramesh Sargam
டிச 20, 2025 20:16

பார்லிமென்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சி வங்கதேசத்தில் நீடிக்கும் பதட்டம். இதைத்தவிர இவர்களுக்கு வேறு ஒரு வேலையும் இல்லையா? எப்பொழுதும் போராட்டம், போராட்டம், போராட்டம்.


ராமகிருஷ்ணன்
டிச 20, 2025 20:10

நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன. இந்தியாவுக்குல் மட்டும் வராதீங்க. அங்கேயே அடித்து கொள்ளுங்கள்.


Skywalker
டிச 20, 2025 19:48

INVASION AND DESTRUCTION IS IN THEIR BLOOD


Sowdarpatti Rayarpadi Ramaswamy
டிச 20, 2025 19:30

போராட்ட காரர்கள் பார்லிமென்ட் கட்டிடத்துக்குள் நுழைந்தால் தற்போதைய அதிபர் முகமது யூனிஸ் க்கு இந்தியா அடைக்கலம் தராது. தீக்குள் விரலைவிட்டாய் நந்தலாலா உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா .


sankar
டிச 20, 2025 19:13

இது இவர்களின் பரம்பரை வழக்கம் -


சமீபத்திய செய்தி