உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிக நகரங்களுக்கு சேவை; உலகின் முன்னணி விமான நிலையங்கள்: முழு பட்டியல் இதோ!

அதிக நகரங்களுக்கு சேவை; உலகின் முன்னணி விமான நிலையங்கள்: முழு பட்டியல் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகின் அதிக நகரங்களுக்கு பிரத்யேகமாக, 'நான்-ஸ்டாப்' சேவை வழங்கும், சிறந்த விமான நிலையம் பட்டியலில், இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த விமான நிலையம், 309 நகரங்களுக்கு 'நான்-ஸ்டாப்' விமான சேவையை வழங்குகிறது.விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு விட்டு நாடு செல்லும் சர்வதேச விமான பயணிகள், 'நான்-ஸ்டாப்' விமான சேவையை அதிகம் விரும்புவர். ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தில் இருந்து, எத்தனை நகரங்களுக்கு பிரத்யேகமாக 'நான்-ஸ்டாப்' சேவை வழங்கப்படுகிறது என்பதை பொறுத்தே, அந்த விமான நிலையம், 'பெஸ்ட் கனெக்டட்' என்று முடிவு செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில், டாப் 20 சர்வதேச 'பெஸ்ட் கனெக்டட்' விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையம், 309 விமான சேவைகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

பட்டியல் விபரம் பின்வருமாறு:

* இஸ்தான்புல், துருக்கி விமான நிலையம், 309 நகரங்களுக்கு 'நான்-ஸ்டாப்' விமான சேவையை வழங்கி முதல் இடத்தை பிடித்துள்ளது. * பிராங்க்பர்ட், ஜெர்மனி விமான நிலையம், 296 நகரங்களுக்கு 'நான்-ஸ்டாப்' விமான சேவையை வழங்கி 2ம் இடத்தை பிடித்துள்ளது. * பாரிஸ், பிரான்ஸ் விமான நிலையம், 282 நகரங்களுக்கு 'நான்-ஸ்டாப்' விமான சேவையை வழங்கி 3 ம் இடத்தை பிடித்துள்ளது. * ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து விமான நிலையம், 270 நகரங்களுக்கு 'நான்-ஸ்டாப்' விமான சேவையை வழங்கி 4ம் இடத்தை பிடித்துள்ளது. * சிகாகோ, அமெரிக்கா விமான நிலையம், 270 நகரங்களுக்கு 'நான்-ஸ்டாப்' விமான சேவையை வழங்கி 5ம் இடத்தை பிடித்துள்ளது. * 6ம் இடம்- துபாய், யு.ஏ.இ., - 269 நகரம்* 7ம் இடம்- டல்லாஸ், அமெரிக்கா- 261 நகரம்* 8ம் இடம்- ஷாங்காய், சீனா - 243 நகரம்* 9ம் இடம்- அட்லாண்டா, அமெரிக்கா - 237 நகரம்* 10ம் இடம்- ரோம், இத்தாலி - 234 நகரம்* 11ம் இடம்- டென்வர், அமெரிக்கா - 229 நகரம்* 12ம் இடம்- லண்டன், பிரிட்டன் - 221 நகரம்* 13ம் இடம்- ஜெட்டா, சவுதி - 219 நகரம்* 14ம் இடம்- மாட்ரிட், ஸ்பெயின் - 218 நகரம்*15ம் இடம்- கேட்விக், பிரிட்டன்- 218 நகரம்* 16ம் இடம்- முனிச், ஜெர்மனி - 217 நகரம்* 17ம் இடம்- பார்சிலோனா, ஸ்பெயின் - 209 நகரம்* 18ம் இடம்- பீஜிங், சீனா - 206 நகரம்,* 19ம் இடம்- செங்து ஷாங்லியூ, சீனா - 202 நகரம்* 20ம் இடம்- குவாங்சு, சீனா - 202 நகரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
ஆக 27, 2024 20:17

நம்ம நாடு இந்தியா?


Easwar Kamal
ஆக 27, 2024 17:10

நம்ம இந்திய இந்த இடத்துக்கு எல்லாம் வர vaipae இல்லையா ?


ramesh
ஆக 27, 2024 12:25

Nice to see this info.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை