உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிரிட்டனில் 32 வயது நபர் கைது

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிரிட்டனில் 32 வயது நபர் கைது

லண்டன்: பிரிட்டனில் 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 32 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.பிரிட்டனின் வால்சலில் நேற்று மாலை 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, அங்கு வந்த ஒரு நபர் இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் புகார் அளித்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.வால்சால் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் பில் டால்பி கூறுகையில்,குட்டையான கூந்தல் மற்றும் கருமையான ஆடை அணிந்திருந்த சந்தேக நபர், சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு தொடங்கிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார் .தாக்குதல் நடத்தியவரை அடையாளம் கண்டு கைது செய்வதில் புலனாய்வாளர்களுக்கு உதவுவதில் தனது குழு கவனம் செலுத்துகிறது.எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.வால்சால் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பகுதி, மேலும் இந்த மோசமான தாக்குதல் எங்கள் சமூகங்களில் ஏற்படுத்தும் பயத்தையும் கவலையையும் நாங்கள் அறிவோம். வரும் நாட்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 28, 2025 07:30

அங்கு தண்டனை எப்படி? குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்களா? அல்லது இந்தியா போன்று போதிய ஆதாரங்கள் இல்லையென்று விடுவிக்கப் படுவார்களா? இந்தியாவில் நீதிமன்றத்தின் உள்ளே, நீதிபதியின் முன்னே குற்றம் நிகழ்ந்தாலும், ஆதாரம் கேட்பார்கள் நமது நீதிமான்கள்.


Ramesh Sargam
அக் 28, 2025 07:28

அங்கு தண்டனை எப்படி? குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்களா? அல்லது இந்தியா போன்று போதிய ஆதாரங்கள் இல்லையென்று விடுவிக்கப்படுவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை