உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீக்கிய பெண் மீது பாலியல் தாக்குதல்: இன வெறியால் பிரிட்டனில் கொடுமை

சீக்கிய பெண் மீது பாலியல் தாக்குதல்: இன வெறியால் பிரிட்டனில் கொடுமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரிட்டன்: பிரிட்டனில் 'உன் நாட்டுக்கே திரும்பி போ' என்று கூறி, சீக்கிய பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உலகின் பல்வேறு நாடுகளிலும், புலம்பெயர் மக்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரிட்டனில், 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் 'உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: பயங்கரமான சம்பவம். சீக்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆண்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பியான, பிரீத் கவுர் கில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். அவர், 'இது தீவிர வன்முறை மற்றும் இனவெறியின் வெளிப்பாடு. குற்றவாளிகள் இங்குதான் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சீக்கிய பெண்ணிற்கு நீதி கிடைக்கவும் சீக்கிய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார். பிரிட்டனில் சமீப காலமாக இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என சீக்கிய சமூகத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
செப் 15, 2025 07:58

இந்தியா முன்னேறிருச்சுனு சொல்ற அரசு எல்லாரையும் வெளி நாட்டில இருந்து திரும்ப வரச்சொல்ல வேண்டியதுதானே சாமி. .


அப்பாவி
செப் 14, 2025 09:16

கிட்டத்தட்ட ரெண்டு மில்லியன் இந்தியர்கள் அங்கே வாழுறாங்களாம். அத்தனை பிரிட்டிஷ்காரங்ங்க இங்கே வந்து வாழ வழியுண்டா? இங்கேருந்து ஒரு ஆள் போனா அஞ்சு வருஷத்தில் ஒரு கிராமத்தையே அங்கே குடியேத்திருவாங்க. அவன் ஏன் காண்டாக மாட்டான்?


Modisha
செப் 13, 2025 23:03

What senseless people these englishmen are. Sikhs and Hindus there are law abiding quiet communities there. There is another religious group there that is engulfing the whole of England and those British imbeciles are totally oblivious to the dangers therefrom.


Subburamu K
செப் 13, 2025 21:04

European origin peoples are thinking themselves as superior creatures. Peoples without humanity are animals only. The day is not for away for the increase in Asian African black peoples population and extinction of white peoples. Bad karma will yield bad results only.


HoneyBee
செப் 13, 2025 19:54

அழிவு வந்தா இப்படி தான் புத்தி போகும். சூரியன் மறையாத நாடு இனி இருளில் தான் இருக்கும்


சமீபத்திய செய்தி