உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சென்ற இடமெல்லாம் ஆதரவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி

சென்ற இடமெல்லாம் ஆதரவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' நாங்கள் செல்லும் இடம் எல்லாம் புரிதலும், ஆதரவும் கிடைத்தது,'' என எம்.பி.,க்கள் குழுவுக்கு தலைமையேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.இந்த நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அமெரிக்காவில் விளக்கம் அளிக்க சென்றுள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறியதாவது: நாங்கள் செல்லும் இடம் எல்லாம் எங்களுக்கு ஆதரவும், புரிதலும் கிடைத்தது என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த இரண்டு விஷயத்திற்காக தான் நாங்கள் வந்துள்ளோம். இன்றும், நாளையும் சந்திக்க உள்ள போதும் அதனையே எதிர்பார்க்கிறோம்.இதுபோன்ற நேரத்தை செலவு செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தியா வளர்ச்சியிலும், பொருளாதார விரிவாக்கத்திலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களே வெளியே கொண்டு வருவதிலும், வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைவதிலும் கவனம் கொண்ட நாடு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற செயல்கள் நமக்கு எதிராக செய்யப்படும் போது, எல்லைக்கு அப்பால் இருந்து வருபவர்கள், நமது குடிமக்களை கொல்ல அனுமதிக்க மாட்டோம், பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.இந்தியாவில் பயங்கரவாத முகாம்கள் ஏதும் இல்லை. இதனால் தான் அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீதான தாக்குதல் துவங்கியதில் இருந்து சர்வதேச அளவில் போர் முறைகள் மாறிவிட்டன. ட்ரோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போதும் ட்ரோன்கள் பயன்பாடு அதிகமாக இருந்தது. ட்ரோன்கள், ஏவுகணை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். துணை அதிபருடன் சந்திப்புசசி தரூர் தலைமையிலான இந்திய குழுவினர், அமெரிக்க துணை அதிபர் வான்சை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சசிதரூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாஷிங்டன்னில் குழுவினருடன் துணை அதிபருடன் சிறப்பான சந்திப்பு நடந்தது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஒத்துழைப்பு குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூன் 06, 2025 07:13

கவலையே பட வேண்டாம், இந்தியா திரும்பி வந்து மாறியவுடன் உமக்கு தகுந்த வெகுமதி காத்திருக்கிறது!


vadivelu
ஜூன் 06, 2025 09:28

கண்டிப்பாக மதிப்பறிந்தவர்களிடம் இருந்து மரியாதை கிடைக்கும். உலகின் நாடுக்ளின் ஆதரவு அவர்கள் இந்தியாவின் மீது அளித்துள்ள மதிப்பே ஆகும். மனம் வருத்தம் அடையாதீர்கள். இது இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.


vivek
ஜூன் 06, 2025 11:13

வேணுகோபால் போன்ற கொத்தடிமைகள் ஊளையிடும்...... கவலைவேண்டாம்....


தாமரை மலர்கிறது
ஜூன் 06, 2025 00:51

இதுநாள் வரை பப்புவின் பிரதிநிதியாக உலகம் சுற்றியவர் முதல்தடவையாக மோடியின் பிரதிநிதியாக உலகம் சுற்றும்போது, மதிப்பும் மரியாதையும் கிடைப்பதை பார்த்து சசிதரூர் ஆச்சரியப்படுகிறார்.


Priyan Vadanad
ஜூன் 06, 2025 00:27

இப்போது சசி தரூர் இனி வரபோகுமிடத்தில் ராஜ மரியாதை கொஞ்ச நாளைக்கு கிடைக்கும். அப்புறம் செல்லாக்காசு போடுமிடத்தில் இடமுண்டு.


Raj S
ஜூன் 05, 2025 23:42

எதிர் கட்சில இருந்தாலும் இந்த மாதிரி உண்மையை உரக்க சொல்ல தைரியம் வேண்டும்... நம்ம கோண வாயன் கும்பல் மாதிரி டெல்லிக்கு போய் மோடி கால்ல விழுந்துட்டு இங்க வந்த அப்பறம் வெட்டி வீராப்பு பண்ணல


திருட்டு திராவிடன்
ஜூன் 06, 2025 12:59

ஹா ஹா


spr
ஜூன் 05, 2025 22:54

இதுவரையில் சென்ற குழுக்களின் செயல்பாடு குறித்த வீடியோக்களைப் பார்க்கும் பொது, திரு சசி தரூர் குழு மற்றும் திரு ஒவைசியின் குழு சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் கேள்விகளை அவருக்கென ஒதுக்கி வழிவிட்ட குழுவின் இதர அன்பர்களும், சாதுர்யமாகக் கையாண்ட திரு தரூரின் திறமைய பாராட்டப் பட வேண்டியதே. இந்தக் குழுவின் அடிப்படை நோக்கம் ஒரு வேளை பிற நாட்டு செய்தி பத்திரிக்கை நிருபர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் அறிந்த நம் நாட்டின் இந்து பத்திரிகை நிருபர் பொறுப்பற்ற முறையில், ராகுல் போலக் கேள்வி கேட்டது அபத்தம்.


முக்கிய வீடியோ