உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தை அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டார்: முகமது யூனுஸ் மீது ஷேக் ஹசீனா கடும் குற்றச்சாட்டு

வங்கதேசத்தை அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டார்: முகமது யூனுஸ் மீது ஷேக் ஹசீனா கடும் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'பயங்கரவாதிகளின் உதவியோடு ஆட்சி நடத்தி வருகிறார் முகமது யூனுஸ். வங்கதேசத்தை அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டார்' என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசு கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் முகமது யூனுஸ் மீது வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக சாடி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: பயங்கரவாதிகளின் உதவியோடு ஆட்சி நடத்தி வருகிறார் முகமது யூனுஸ். வங்க தேசத்தை அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டார். வங்கதேசத்தில் தனது கட்சிக்கு தடை விதித்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.வங்கதேசத்தின் மண்ணின் ஒரு அங்குலத்தைக்கூட யாருக்கும் விட்டுக்கொடுக்கும் நோக்கம் யாரிடமும் இருக்க முடியாது.ஒரே ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். பலர் கைது செய்யப்பட்டனர். இப்போது சிறைகள் காலியாக உள்ளன. அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த தலைவருக்கு அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் உரிமையை யார் கொடுத்தது? அவருக்கு மக்களின் ஆணை இல்லை. அரசியலமைப்பு சட்டம் குறித்து அடிப்படையும் இல்லை. பிரதமர் பதவியில் இருக்க முகமது யூனுசுக்கு எந்த தகுதியும் இல்லை. எனவே பார்லிமென்ட் இல்லாமல் அவர் எப்படி சட்டத்தை மாற்ற முடியும். இது சட்டவிரோதமானது. அவர்கள் அவாமி லீக் கட்சியை தடை செய்துள்ளனர். இவ்வாறு ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBBU,MADURAI
மே 25, 2025 20:16

Bangladesh: Heavy troop movement on the streets of Dhaka. Coup on the way and the end of Yunuss 10-month dictatorship. Muhammad Yunus wants India to rescue him from Bangladesh, but India has rejected his request.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 25, 2025 18:30

அவர்களே உங்களை இப்போழுது தான் மறந்து இருந்தார்கள். நீங்களே அவர்களுக்கு ஞாபகப்படுத்தி விட்டீர்களே.


முக்கிய வீடியோ