உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காமெடி நடிகர் கபில் சர்மா உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல்

காமெடி நடிகர் கபில் சர்மா உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொரண்டோ: காமெடி நடிகர் கபில் சர்மாவின் கப்ஸ் கேப் என்ற உணவகத்தின் மீது நேற்று இரவு காரில் இருந்து மர்மநபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கபில் சர்மா, நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான தி கபில் ஷர்மா ஷோ மற்றும் காமெடி நைட்ஸ் வித் கபில் ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர். இவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் சமீபத்தில் புதிதாக கப்ஸ் கேப் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தின் மீது நேற்று இரவு காரிலிருந்த மர்ம நபர் துப்பாக்கியால் 9 முறை சுட்டுவிட்டு தப்பிவிட்டான். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளான். இது பற்றி கனடா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sekar ng
ஜூலை 11, 2025 10:42

கணடாவும், பகிஸ்தானும் பயங்கரவாத பயிற்சி பள்ளிக்கு அரசு பாதுகாப்பும் நிதியும் கொடுக்கின்றன


அப்பாபி
ஜூலை 11, 2025 10:08

எல்லாம்.இங்கே சம்பாரிச்சு அங்கே ஓட்டல் திறக்கறான்.


Thiru, Coimbatore
ஜூலை 10, 2025 21:06

அந்த பயங்கரவாதியை பிடித்து இந்தியாவிற்கு நாடு கடத்துங்கள் பிறகு நடப்பதை பாருங்கள்


Nachiar
ஜூலை 10, 2025 20:59

புதிய பிரதமர் காணி என்ன செய்யப் போகிறார் என்பதை கனடிய ஹிந்துக்கள் மட்டுமன்றி அனைத்து ஹிந்துக்களும் பார்த்திருக்க வேண்டும்.