உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் மின்னோபோலீஸ் கத்தோலிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம் மின்னோபோலீஸ் நகரில் கத்தோலிக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று முதல் நாள் வகுப்புகள் தொடங்கின.மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த சில வினாடிகளில் போலீசார் வந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்அவர் யார், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையவரா என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரார்த்தனை செய்கிறேன்!

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, கவர்னர் டிம் வால்ஸ் கூறியதாவது: கத்தோலிக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ரோந்துப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த கொடூரமான வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 28, 2025 03:29

டிரம்புக்கு சொல்லுங்க. ஏழு நாட்டு போரையே நிறுத்தியவருக்கு, இந்த துப்பாக்கி சூடு பிரச்சினையை நிறுத்த தெரியாதா என்ன?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 28, 2025 01:05

கொலைகாரன் ராபின் வெஸ்ட்மேன் கொலை என்கவுண்டர் செய்யப்பட்டான். எல்லா அமெரிக்க பள்ளிகளிலும் ஞாயிறு மாலை வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஆட்டோமேடிக் மிஷின் கன் வாங்குறதுக்கு ஒரு தடையும் இல்லை. எந்தவொரு பைத்தியக்காரனும் ஒரு விசாரணையும் இன்றி வாங்கலாம். அப்பாவிகள் செத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை