உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசிசிபியில் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் 9ம் தேதி ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 12, 2025 00:59

இந்தியாவில் உள்ள தமிழகத்தின் மீனவ பிரச்சினை எப்படி முடிவுக்கு வராதோ, அதேபோன்று அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பிரச்சினை. இது இரண்டையும் நிறுத்தி ஒரு நிரந்தர முடிவு காண்பவர்களுக்கு அடுத்தவருட அமைதிக்கான நோபல் அமைதி பரிசு. அமெரிக்காவில் தினம் தினம் தீபாவளி.


rani
அக் 11, 2025 22:35

துப்பாக்கி கலாச்சாரம் ஒழிய வேண்டும்


சமீபத்திய செய்தி