உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெனீவா: காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், போரை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு ஆண்டுகளை நெருங்கி நடந்து வரும் இந்தப் போரில், காசாவில் 53,475 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மோதலை நிறுத்தும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டியதால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், காசாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், காசா மீது கொஞ்சம் கருணை காட்டும்படியும் இஸ்ரேலிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: காசாவில் இருக்கும் மக்களின் தற்போதைய மனநிலையை என்னால் உணர முடிகிறது. நான் அதைப் பார்க்கிறேன். அந்த சத்தங்களும் எனக்கு கேட்கிறது. மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். உணவையும், மருத்துவப் பொருட்களையும் ஆயுதமாக்குவது மிகவும் தவறு. அரசியல் தீர்வு மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும். இந்தப் போரினால் இஸ்ரேலும் பாதிக்கிறது. உங்களால் கருணை காட்ட முடியும் என்றால், அது உங்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே நல்லது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Indian-இந்தியன்
மே 23, 2025 16:33

இந்த பயலை முதலில் ஒழிக்கவேண்டும்..... அப்பத்தான் உலகம் சீராகும்....


Sridhar
மே 23, 2025 15:26

இந்த திருட்டு பய ஏற்கனவே கொரோனா விசயத்துல ஏகப்பட்ட தில்லுமுல்லு செஞ்சவன். காசா மீது கருணை காட்டணுமாம் ஏன், அதையே உன் நண்பன் ஹமாஸிடம் சொல்லி பிணைக்கைதிகளையெல்லாம் உடனே விடுவிக்கச்சொல்லி அந்த காசா மக்களை கேடயமாக பயன்படுத்தி செய்யும் தீவிரவாத செயல்களை நிறுத்த சொல்லவேண்டியதுதானே? இஸ்ரேல் குண்டு போடுறாங்கன்னா அது ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத்தான் இருக்கும். அவனுக பொதுமக்களிடம் போய் மறைந்து கொண்டால், அதை அனுமதிக்காமல் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அந்த மக்களின் பொறுப்பு. அதை செய்யாமல், தீவிரவாதிகளுக்கு துணை நின்றால், அதன் பின்விளைவுகளை அனுபவிக்க தயாராக இருக்கவேண்டும். மனதளவில் உறுதிபூண்டுதான் இருக்கிறார்கள் போல தெரிகிறது. சும்மா உலக மக்கள் மனதில் ஒரு பரிதாபத்தையும் உண்டு பண்ணி வைப்போமே என்ற நோக்கில் புலம்பறாங்க. இந்த உலக சுகாதார அமைப்பு இன்னுமா சுத்திட்டு திரியுது? ஏற்கனவே டிரம்ப் பியூச பிடிங்கிட்டாருல்ல?


Karthik
மே 23, 2025 14:25

உங்க குடும்ப உறுப்பினர்கள்ல யாரையாவது பிணைக்கைதியா புடிச்சிகிட்டு போயி வருஷ கணக்கா விடுவிக்காம வச்சிருந்தா அப்பவும் இதே வார்த்தையை சொல்லுவீங்களா அப்பாடின்னா அங்க கைதியா இருக்குறவங்க எல்லாம் மனுசங்க இல்லையா? அவுங்களுக்கு உரிமை இல்லையா? உசுரு இல்லையா? உறவு இல்லையா? இல்ல சுதந்திரமா வாழ தான் தகுதி இல்லையா?? என்ன உங்க அநியாயம்??


மொட்டை தாசன்...
மே 23, 2025 14:17

ஏன் பிடித்துவைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க சொல்ல மனம் வரவில்லையோ


Balamurugan
மே 23, 2025 13:48

இப்படி கெஞ்சுவதற்கு பதிலாக தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை ஐநா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் எடுக்க முடியுமா? திராணி இருந்தால் முதலில் அவனுகளுக்கு பாடம் எடுங்கள். தீவிரவாதிகள் அவர்களுடைய மக்களையே கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அங்குள்ள மக்களும் தீவிரவாதத்தை ஆதரித்தால் வந்த வினை தான் இது.


raja
மே 23, 2025 11:52

இந்த ஐநா அமைப்பு எதற்கு செயல்படுகிறது என்றே தெரியவில்லை இதே வேறொரு மேற்குலக நாடுகள் அல்லாத நாடு இது மாதிரி போர் செய்தால் உடனே மூக்கை நுழைப்பார்கள் ஆனால் இப்பொழுது கெஞ்சுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் முதலாளிகள் இப்படி செயல்படுவதற்கு இந்த அமைப்பை கலைத்து விட்டால் நன்றாக இருக்கும்...


Keshavan.J
மே 23, 2025 11:36

அந்த மக்கள் ஏன் தற்காலிகமாக அருகில் உள்ள எகிப்து, ஜோர்டான் மற்றும் லெபெனோனில் தங்களாமே. ஏன் என்றல் அவர்கள் இந்த மக்களை வரவேற்கவில்லை. அதற்கு காரணம் இவர்கள் இதற்கு முன்பு அந்த நாட்டில் நடத்திய கேவலமான காரியங்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 23, 2025 11:11

புரியல..... உலகநாடுகள், ஐ நா சபை மற்றும் உலக சுகாதார நிறுவனங்கள் அனைத்தும் இஸ்ரேலை வற்புறுத்துகின்றனர்.. ஆனால் ஹமாஸுக்கு ஏன் பயங்கர எச்சரிக்கையும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் வற்புறுத்துவதில்லை..உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளை பொறுமை காக்கவும் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கோருகின்றனரே தவிர தீவிரவாதிகளை கண்டிப்பதாக தெரியவில்லை அதிகபட்சமாக கண்டிப்பதென்பது தீவிரவாதத்தை எந்த வடிவத்தில் வந்தாலும் நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம் என்பதாக இருக்கும்.....இது தீவிரவாதத்தை ஊக்குவிக்குமா அல்லது அழிக்குமா.....!!!


MUTHU
மே 23, 2025 13:20

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து ராணுவ வீரனாவது இந்த தீவிரவாத ஒடுக்குதலில் மரணமடைகின்றான். யாரும் கேட்பாரற்ற மரணங்கள்.


RAJ
மே 23, 2025 10:18

இன்னும் நீ இருக்கியா??


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 23, 2025 12:18

கோரோணா இருக்கும் வரை இவர் இருப்பார்.


R. SUKUMAR CHEZHIAN
மே 23, 2025 10:05

காசாவை முற்றிலுமாக இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும், அங்குள்ள பயங்கரவாத ஜிகாதி கும்பல்களை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். பாரதத்தின் நண்பர்கள் இஸ்ரேல்.


MUTHU
மே 23, 2025 11:38

இந்த கூட்டத்தை உலகம் முழுக்க தங்கள் தலைமேல் வைத்து கொண்டாடியது. இரக்கமற்ற கூட்டம். அப்பொழுது இந்த ஐக்கிய நாடுகள் எங்க போயிருந்தார்கள் தெரியவில்லை.


சமீபத்திய செய்தி