உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் தங்கம்

உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் தங்கம்

தோகா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றார். கத்தார் தலைநகர் தோகாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல் நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (585.23 புள்ளி), சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (584.25) முறையே 4, 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் (581.22) 9வது இடம் பிடித்து ஏமாற்றினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய சிம்ரன்பிரீத் கவுர் (21 வயது), 41 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். ஈஷா சிங் 15 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார். ஐஸ்வரி 'வெள்ளி' ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (24 வயது), 595.42 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஐஸ்வரி தோமர், 413.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா (584.30) 10வது இடம் பிடித்து ஏமாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தியாகு
டிச 08, 2025 03:06

சிம்ரன்பிரீத் கவுர் அவர்களே, தாங்கள் வாங்கிய தங்கத்தை பார்த்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும். இல்லனா, கட்டுமர திருட்டு திமுகவினர் அந்த தங்கத்தை யாருக்கும் தெரியாமல் நீங்கள் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போட்டு டாஸ்மாக் சாராயம் அல்லது கள்ள சாராயம் வாங்கி குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் உன் வயது பெண்களை வம்புக்கு இழுப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை