உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 74 சதுர அடி சிறையில் முன்னாள் அமைச்சர் அடைப்பு

74 சதுர அடி சிறையில் முன்னாள் அமைச்சர் அடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர் : ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளி ஈஸ்வரன், 62. மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்தபோது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இவர் தன், 60வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, இசை நிகழ்ச்சி, கார் பந்தய, கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுடன், மது வகைகள், சைக்கிள் போன்றவற்றையும் பரிசாக வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இதை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி, சிங்கப்பூர் சிறை சேவை அதிகாரிகளால் அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது, 74 சதுர அடி பரப்பளவு உள்ளது; ஒரு பாய், இரண்டு போர்வைகள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு முறை குடும்பத்தாரை சந்திக்கலாம். மேலும், நான்கு மின்னணு கடிதத்தை அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAMAKRISHNAN NATESAN
அக் 10, 2024 11:31

இப்ப மட்டும் இந்திய வம்சாவளி ......


Ramesh Sargam
அக் 09, 2024 22:12

அவர் இந்தியாவில் அரசியல்வாதியாக இருந்திருந்தால், சகலவசதிகளுடன் கூடிய சிறை வாழ்க்கை கிடைத்திருக்கும்.


Ramesh Sargam
அக் 09, 2024 21:05

இதுபோன்ற சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்படவேண்டும். அப்பொழுதுதான் ஊழல் ஒழியும்.


Lion Drsekar
அக் 09, 2024 19:46

இங்கு சிறைச்சாலை என்பதை அறியவேண்டும் என்றால் யு டியூபில் சென்று பார்த்தல் உண்மை புரியும் வந்தே மாதரம்


gvr
அக் 09, 2024 17:55

All Dravidian politicians deserve to be in such cells.


HoneyBee
அக் 09, 2024 09:27

இதைப்போல இங்க வந்தா எப்படி இருக்கும். கொள்ளை அடிச்சா ஆப்பு தான்னு சட்டம் வந்தா என்ன?? ஏன் எல்லாரும் தப்பித்து கொள்கிறார்கள்


VENKATASUBRAMANIAN
அக் 09, 2024 08:34

இங்கேயும் நீதிமன்றங்கள உள்ளன. எப்போது உள்ளே போடுவார்கள்.


Sankare Eswar
அக் 09, 2024 07:22

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பயல்கள் திரியிறானுங்க


sankaranarayanan
அக் 09, 2024 07:11

இது போன்று தமிழகத்தில் வருமா அதைக்காணவே காண வேண்டாம்


Easwar Moorthy
அக் 09, 2024 07:00

அது நாடு. இங்கே ?