உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பூமியை தாக்கிய சூரிய புயல்: செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம்

பூமியை தாக்கிய சூரிய புயல்: செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கடந்த 2 தசாப்தங்களில் இல்லாத வகையில், நேற்று( மே 10) சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. இதை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை வானில் ஒளிக் காட்சிகளாக பார்க்க முடிந்தது.இந்த சூரிய புயல் காரணமாக, தொலைத் தொடர்பு, மின் விநியோகம், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சூரிய புயல் தொடர்பான புகைப்படங்களை இணையதளவாசிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இதற்கு முன்னர் கடந்த 2003 ம் ஆண்டு சுவீடனில் சூரிய புயல் தாக்கியது. இதன் பாதிப்பு காரணமாக தென் ஆப்ரிக்காவில் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ