உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வீடியோ போட்டு காட்டிய டிரம்ப்: மிரண்ட தென் ஆப்ரிக்க அதிபர்

வீடியோ போட்டு காட்டிய டிரம்ப்: மிரண்ட தென் ஆப்ரிக்க அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வந்த தென் ஆப்ரிக்க அதிபருக்கு, இனப்படுகொலை வீடியோ போட்டு காட்டி, அவரை தர்மசங்கடத்தில் நெளிய வைத்தார் அதிபர் டிரம்ப்.தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பேச அமெரிக்கா வந்துள்ளார். அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.ராமபோஸாவுடன் தென் ஆப்ரிக்க பிரதிநிதிகளும் வந்தனர். பேச்சுக்கு தயார் செய்து எடுத்து வந்த ஆவணங்களுடன் ராமபோஸா பேச துவங்கியதும், 'விளக்கை அணையுங்கள்' என்றார் டிரம்ப்.அந்த அறைக்குள் இருந்த 'டிவி'யில் வீடியோ ஒன்று ஓடத் துவங்கியது. அதில், தென் ஆப்ரிக்க அரசியல்வாதிகள் சிலர், அந்நாட்டு வெள்ளையின விவசாயிகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பும் காட்சி அதில் இடம் பெற்றன.மொத்தம் நான்கு நிமிடங்கள் ஓடிய அந்த வீடியோவில் வெள்ளையின தென் ஆப்ரிக்க விவசாயிகளுக்கு எதிரான சில படுகொலை காட்சிகளும் இடம் பெற்றன. 'இது மிகப்பெரிய கொடூரம். இதுபோன்ற காட்சிகளை நான் பார்த்ததில்லை' என, கூறிய டிரம்ப், இது தொடர்பாக ராமபோஸாவிடம் விளக்கம் கேட்டார்.தென் ஆப்ரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடப்பதாக கூறப்படுவதை, சிரில் ராமபோஸா திட்டவட்டமாக மறுத்தார்.உக்ரைன் அதிபர் வந்தபோது ஏற்பட்டதை போன்ற பரபரப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ராமபோஸா நிலைமையை நிதானமாக கையாண்டார்.வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச வந்தவர்கள், டிரம்ப் செய்த அதிரடியால் தர்ம சங்கடத்தில் நெளிந்தபடி புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kulandai kannan
மே 23, 2025 13:29

அந்த வீடியோ வே காங்கோ நாட்டில் எடுக்கப் பட்டது. தென்னாப்பிரிக்கா என்று புருடா விட்டுள்ளார் டிரம்ப்.


Gurumoorthy Padmanaban
மே 23, 2025 09:56

ஆமாம் சரியான கருத்து. என்னமோ அமெரிக்கா காரன் உத்தமன் போலவும் மத்தவன் எல்லாம் அயோக்கியன் போலவும் காட்டிக்கொள்ளும் ட்ரும்பிக்கு அங்கே கறுப்பின படுகொலை நடக்கறது தெரியாத என்ன. மாசம் ஒரு இந்தியனை போட்டு தள்ளிக்கொண்டு. இருக்கின்றார்கள் அமெரிக்காவில் . இதை எல்லாரும் போட்டு காட்டினாள் என்ன செய்வார்கள்


Mohan
மே 23, 2025 09:53

ட்ரம்ப் எல்லா நாடுகளையும் வர்தகுதுக்காக black mail செய்து அந்தந்த நாடுகளிடம் பேரம் பேசுகிறார் ... zelensky இடம் பேசி அங்குள்ள சுரங்கங்கள் , தாதுக்கள், இன்னும் பல ஏலத்துக்கு எடுத்தாச்சு .. நல்ல வேலை நம்ம கிட்ட அப்டி ஒன்னும் இல்ல ...அடிமை மனித வளத்தை தவிர ...


Barakat Ali
மே 23, 2025 08:43

ட்ரம்ப் நடந்துகொண்ட விதம் அநாகரிகம்... தனது பதவியின் கௌரவத்துக்கே இழுக்கைத் தேடிக்கொண்டார்.. இருவரும் வேறு வேறு நாடுகளின் அதிபர்கள் .... அதாவது உயர் மட்டம்.. இந்தப் பின்னணியில் பார்த்தால் சங்கடப்படுத்தும் விஷயங்களை வீடியோ ஆதாரங்களுடன் போட்டுக் காட்டுவது மனக்கசப்பை ஏற்படுத்தும்.. பதிலுக்கு அவர் [குறைந்த பட்சம் சமீப ஆண்டுகளில்] கறுப்பினத்தவர் அமெரிக்காவில் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினால் இவர் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார் ????


Ram
மே 23, 2025 07:24

இந்த அமெரிக்கர்கள் கறுப்பினத்தவரை சுட்டுத்தள்ளினார்கள் , அது என்ன ஓர் இரவில் முடிந்ததா ? அதேபோல்தான் இந்தப்பிரச்சனையும் உடனே சரிசெய்ய முடியாது , அதற்கு அமெரிக்கா அங்கு வருபவர்களை நேர்மையாகவும் கனிவுடனம் நடத்தணும் ... அதற்கு முதலில்.....


மீனவ நண்பன்
மே 23, 2025 05:37

தென் ஆப்பிரிக்க அதிபர் நான் கத்தார் ஷேக் மாதிரி லஞ்சம் தரும் நிலைமையில் இல்லை என்று நக்கலடித்தார் என்றும் செய்தி


Kasimani Baskaran
மே 23, 2025 03:51

இந்தியாவுடன் பேசும் பொழுது எப்படி எங்கள் நட்பு நாடான பாகிஸ்தான் மீது நீங்கள் தாக்கமுடியும் என்று வீடியோ போட சந்தர்ப்பம் உள்ளது.


மூர்க்கன்
மே 23, 2025 10:08

அப்போ அந்த பக்கம் தலை வச்சு படுக்காம இருப்பது நம்ம ஜிக்கு நல்லதுன்கிறியா ???


subramanian
மே 23, 2025 12:08

காசிமணி பாஸ்கரன், உங்கள் பதிவுகள் எப்போதும் சரியாக இருக்கும். ஆனால் இந்த முறை தவறான பதிவு.


சமீபத்திய செய்தி