உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சோயாபீன் இறக்குமதி பிரேசிலுக்கு மாற்றம்: சீனா முடிவால் அமெரிக்க விவசாயிகள் கவலை

சோயாபீன் இறக்குமதி பிரேசிலுக்கு மாற்றம்: சீனா முடிவால் அமெரிக்க விவசாயிகள் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சோயாபீன் வர்த்தகத்தை அமெரிக்காவிடம் இருந்து பிரேசிலுக்கு, சீனா மாற்றியது குறித்து அமெரிக்க விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்; விரைவில் இதற்கு தீர்வு காணும்படி விவசாயிகள் கூட்டமைப்பு, அதிபர் டிரம்புக்கு அழுத்தம் தர துவங்கியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே தொடர்ச்சியாக வர்த்தக போர் நடக்கிறது. இதனால், பரஸ்பரம் இறக்குமதி பொருட் களுக்கு அதிக வரி விதித்துள்ளனர். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு குறிப்பாக சோயாபீன்களுக்கு, சீனா அதிக வரியை விதித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ytg7qgwb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெரும் பாதிப்பு இதனால் தென் அமெரிக்க நாடுகளின் சோயாபீன்களைக் காட்டிலும் அமெரிக்க சோயாபீன் விலை சீன இறக்குமதியாளர்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது. இதையடுத்து, நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில், சீனா இறக்குமதி செய்த சோயா பீனி ல் சுமார் 70 சதவீதம் பிரேசிலில் இருந்து வந்துள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில், சீன சந்தையில் 4 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு தற்போது வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. சந்தைப்பங்கு குறைந்ததால், அமெரிக்க சோயாபீன் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் கொள்முதல் விலை குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். டிரம்புக்கு கடிதம் அமெரிக்க சோயாபீன் கூட்டமைப்பு, தங்களின் மிகப்பெரிய வாடிக்கையாளரான சீனா உடனான நீண்டகால வர்த்தகப் போரை தாங்க முடியாது என்றும், விரைவில் இதை முடிவுக்கு கொண்டு வருமாறும் டிரம்புக்கு கடிதம் எழுதிஉள்ளது. தரவுகளின்படி, கடந்த ஜூலையில் சீனாவில் அமெரிக்க சோயாபீன் இறக்குமதி 4.21 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.47 சதவீதம் குறைவு. ஜூலையில் மட்டும், சீனாவில் சோயாபீன் இறக்குமதி கடந்த ஆண்டைக்காட்டிலும் கிட்டத்தட்ட 19 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் 90 சதவீதத்தை பிரேசில் சப்ளை செய்துள்ளதாக சீன சுங்க நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Subash BV
ஆக 24, 2025 16:52

AMERICANS SHOULD WITHDRAW THEIR BIG BOSS ATTITUDE TOWARDS OTHER DEVELOPING COUNTRIES.


joe
ஆக 23, 2025 13:19

அமேசான் ஆற்று பகுதியான பிரேசிலின் உணவு பொருளும் சூப்பர் .அதே சமயம் சீனாவின் வர்த்தக போக்கும் இந்த சமயம் பார்த்து பிரேசிலுடன் வர்த்தகம் கொள்வது சூப்பரோ சூப்பர் . மேலும் ஐரோப்பிய நாடுகளுடன் உலக அளவில் சீனாதான் மேம்பட்டுள்ளது .அமெரிக்காவால் இதை தடுக்கமுடியாது .மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஐரோப்பிய நாடுகளுடனான மேப்பாட்டிலேயே போய்க்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்துக்கொள்ளவேண்டும் .அதனால்தான் சீனாவை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை .....புரிந்ததா


joe
ஆக 23, 2025 12:58

சீனாவின் முடிவு சரியானதே .


N.Purushothaman
ஆக 23, 2025 06:44

அதாவது எந்த ஒரு பொருளுக்கும் உற்பத்தி ஆகும் நாட்டில் இருந்து அளவிற்கு மீறி ஏற்றுமதி வரி விதித்தால் அல்லது இறக்குமதிக்கான வரியை உயர்த்தினால் அந்த நாட்டின் விலை பொருள் விலை உயர்ந்து அதற்க்கு போட்டி நாடுடனான விலை பொருளின் விலையை விட அதிகமாகி விடும் .. அது போன்ற முடிவுகள் சம்மந்தப்பட்ட நாட்டின் வர்த்தக சந்தையை காலி செய்து விடும் ....அமெரிக்காவிலும் அது தான் நடக்கிறது....பாரத பொருளுக்கு தற்போது ஐம்பது சதவிகிதம் வரி என்பது பாரத நாட்டின் விலை பொருளுக்கு போட்டி நாடான விலை பொருளின் விலையை விட அதிகமாகி விடும் . .அதன் பிறகு எத்தனை சதவிகிதம் வரி விதித்தாலும் அதனால் ஒன்றும் ஆக போவதில்லை ..அதனால் தான் பாரதம் மாற்று நாட்டினரின் வர்த்தக சந்தையை பயன்படுத்தி கொள்ள சம்மந்தப்பட்ட நாடுகளிடம் பேச்சுவார்த்தையை துவங்கி மிக விரைவாக சென்று கொண்டு இருக்கிறது ..


Shivakumar
ஆக 23, 2025 03:57

அந்த டொனால்ட் டக் யார் பேச்சையும் கேட்கபோவது இல்லை. அமெரிக்காவின் சரிவு இவரிடம் இருந்துதான் தொடங்குகின்றது.


புதிய வீடியோ