உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இதனால், தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த முயற்சிஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் 10வது ராக்கெட்டின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது தோல்வி

கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிகழ்ந்த இரு சோதனைகள் தோல்வியடைந்தன. தற்போது, 3வது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எலான் மஸ்கின் திட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 11:47

Elon Musks exploded ... Melony shocked.


sankaranarayanan
ஜூன் 19, 2025 11:38

பாவந் வேளாண் மாஸ்கிற்கு டிரம்புடன் சேர்ந்த காரணத்தால்தான் எல்லா இடங்களிலும் தோல்வி இனிமேலாவது அதை உணர்ந்து டிரம்புடன் விலகி இருப்பதே அவருக்கு நல்லது முன்னேறலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை