உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கார் ரேஸில் மீண்டும் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்

கார் ரேஸில் மீண்டும் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாலென்சியா: ஸ்பெயினில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்.,10ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வந்த அஜித், கடந்த சில தினங்களாக கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்தது. இந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அதில் காயமின்றி அவர் தப்பினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9l3hqxnd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த ரேஸில் அஜித் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேஸில் பங்கேற்றார். ரேஸின் போது குறுக்கே வந்த ஒரு காரால், அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அவரது கார் 3 முறை சுழன்றடித்தது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை பார்க்கும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Karthik
பிப் 23, 2025 15:03

தடைகளைக் கண்டு தளராத உங்கள் விடாமுயற்சியால், விரைவில் வெற்றி கிரீடம் உமக்கே.. வாழ்த்துக்கள் Mr.AK


ramesh
பிப் 23, 2025 10:58

இனிமேல் கார் ரேஸ் இல் பங்கேற்காமல் இருப்பது நல்லது . இது இறைவனின் எச்சரிக்கையாக கூட இருக்கலாம் . நல்ல மனிதர் நலமுடன் நீட ஆயுளுடன் வாழ வேண்டும்


Karthik
பிப் 23, 2025 14:48

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதல்ல, ஒருவர் தன் வாழ்நாளில் என்ன சாதித்தார் என்பதே வரலாறு. உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வரும்..


Jay
பிப் 23, 2025 10:41

அஜித் அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். வயது ஆகும்போது நமது மூளை மற்றும் உடம்பில் reflexes குறையும். F1 கார் ஓட்டு வதற்கு உலகிலேயே அதி வேகமாக reflexes இருக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அஜித் அவருக்கு எப்படி இருக்கிறது என்று சோதனை செய்து பார்த்துக்கொண்டு இது போன்ற முயற்சி செய்யலாம். அஜித்துக்கு லட்சம் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர் அருமையான குடும்பம் உள்ளது அதை மனதில் கொண்டு பழைய ஆசைகளை புதுப்பிப்பதற்கு தகுதிப்படுத்திக் கொண்டு இறங்க வேண்டும்.


Karthik
பிப் 23, 2025 14:57

ஒருவேளை , நீங்கள் சொன்ன விஷயம் அவருக்கு தெரியாமலிருக்கும் என்று நினைக்கிறீர்களா..?? நம்மால் முடியாத ஒரு விஷயத்தை ஒருவர் முயற்சிக்கிறாரெனில், குறைந்த பட்சம் அவரை வாழ்த்தவோ / உற்சாகப்படுத்தவோ செய்யலாமே. ??


KRISHNAN R
பிப் 23, 2025 10:27

இனிமே சும்மா இருக்க வேண்டும் என்ற வார்நிங்கு


PR Makudeswaran
பிப் 23, 2025 10:08

கார் ரேஸ் எங்கும் நடப்பது தான். விபத்து நடக்கும் என்று தெரிந்தது தான். சினிமாக்காரன் என்றால் அவன் பின்னாலே போவீர்கள்


Karthik
பிப் 23, 2025 14:42

அவர் ஜெயித்தால் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டுக்கு, ஏன் தமிழனுக்கே பெருமை. நினைவிருக்கட்டும்..


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:43

வயதாகிவிட்டதை மறைக்க வேண்டாமா ?


Karthik
பிப் 23, 2025 14:38

சாதிக்க வயது ஒரு தடை இல்லை. தேவை திறமை. மறக்க வேண்டாம்..


naranam
பிப் 23, 2025 01:44

இவருக்கும் வேறு வேலை இல்லை ரசிகர்களுக்கும் தான்!


Senthoora
பிப் 23, 2025 06:08

அப்போ உங்க ஆளைப்போல அரசியல் செய்து மக்களை ஏமாற்றணுமா?


Sriniv
பிப் 23, 2025 00:17

God has given him 2 warnings. Ajit should understand this and stop his racing interests immediately.


Bye Pass
பிப் 22, 2025 23:37

வழக்கமா நடிகர்களுக்கு டூப் போட்டு தானே வழக்கம்


Karthik
பிப் 23, 2025 14:35

Its not in a reel cinema, its REAL Wake up first.


Mediagoons
பிப் 22, 2025 22:51

பிரசியாக ராஜ் போகாதது , மோடியிடம் அஸ்ஸி வாங்காததுதான் அனைத்திற்கும் காரணம்


Senthoora
பிப் 23, 2025 06:10

விபத்து நடந்தது அதுக்கு முன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை