உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கை உறுதி

தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கை உறுதி

கொழும்பு : ''இலங்கையின் வடக்கு மாகாணத்தில், ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்கள் முழுதுமாக விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்,'' என, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே உறுதி அளித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்து வந்த போரின் போது, 1980களில் துவங்கி தமிழர்களின் நிலங்களை அந்நாட்டு அரசு கைப்பற்றி, அதை ராணுவ பயன்பாட்டுக்கு அளித்தது. போர் முடிந்த பின், 2015 முதல் இந்த நிலங்கள் படிப்படியாக மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக பல முக்கிய முடிவுகளை அவர் அறிவித்து வருகிறார். இதற்கிடையே, அதிபராக பதவி ஏற்ற பின் வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு நேற்று அதிபர் திசநாயகே முதல்முறையாக சென்றார். அப்போது அவர் கூறுகையில், ''ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருக்கும் தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
பிப் 01, 2025 15:25

நிறைய நில உரிமையாளர்கள் அகதிகளாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்டார்கள். போர் நடந்த இடங்களில் பல ஊர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிந்து விட்டன. அந்த நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி விட்டார்கள். மீதி நிலங்களில் ராணுவ ஆக்கிரமிப்பு. ஆக இது ஏமாற்ற வாக்குறுதி.


கோமாளி
பிப் 01, 2025 08:06

அப்படினா முழு இலங்கையையும் தர வேண்டுமே


DRK
பிப் 01, 2025 07:37

மகிழ்ச்சி


MP.K
பிப் 01, 2025 03:33

தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அதுவே தமிழ் மக்கள் இலங்கையில் அமைதியாக வாழ வழிவகை செய்ததது போல ஆகி விடும். நன்றி


வீரபத்திரன்,கருங்காலக்குடி
பிப் 01, 2025 04:29

அப்படியே கச்சத்தீவையும் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தால் இரு நாடுகளின் உறவு நன்றாக இருக்கும்.


முக்கிய வீடியோ