உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.கடந்த ஜூன் 29ம் தேதி அன்று, இந்திய மீனவர்கள் 4 பேர் மீன் பிடிக்கச்சென்றனர். அப்போது மோசமான வானிலை காரணமாக, இந்திய மீனவர்கள் கடலில் சிக்கி, அனைத்து தொடர்பு இணைப்புகளையும் இழந்தனர்.இதனை தொடர்ந்து மும்பை கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கை கடற்படைக்கு தெரிவித்த நிலையில், இலங்கை கடற்படையின் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு பணியால் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை:மீட்கப்பட்ட 4 மீனவர்களும் டிகோவிட்டா துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர், அங்கு அவர்களுக்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்தது.கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இரண்டு வாரங்களில், 2வது முறையாக இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து மீனவர்கள் 4 பேரும் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்காக வத்தளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Murthy
ஜூலை 08, 2025 00:38

தமிழ் மீனவர்களை கொல்வார்கள் . ....இந்திய மீனவர்களை காப்பாற்றுவார்கள்


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 18:40

இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படைக்கு பாராட்டுக்கள்.


தஞ்சை மன்னர்
ஜூலை 07, 2025 16:15

இப்போ இவங்க தமிழக மீனவர்கள் அல்ல அப்படியா என்ன சுட்டு விட்டுத்தானே பேசவே ஆரம்பிப்பான் சிங்களன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை