உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம்: பஹல்காம் சம்பவம் குறித்து இலங்கை கருத்து

கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம்: பஹல்காம் சம்பவம் குறித்து இலங்கை கருத்து

கொழும்பு: பஹல்காம் சம்பவம் போல கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார்.ஜம்முகாஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்பு உடையவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.பஹல்காம் தாக்குதல் நடடிவக்கையை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கூர்மைப்படுத்தி உள்ளது. உலக நாடுகள் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றன.அந்த வகையில், கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று பஹல்காம் சம்பவத்தை முன் வைத்து இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது சமூகவலை தள பதிவில் கூறி உள்ளதாவது;பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், நமது உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. இந்தக் கடினமான காலங்களில் நாங்கள் இந்தியாவுடன் துணை நிற்போம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

thehindu
ஏப் 26, 2025 00:27

இந்துமதவாத அரசின் நிலை படு மோசமாகிவிட்டது . ராமருக்கு ராவணன் துணை தேவைப்படுகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 25, 2025 23:49

இந்தியாவுக்கு பிரச்னை ஏற்பட்டால் துணை நிற்போம் ........ எப்படி ?? சீன உளவுக்கப்பலுக்கு உளவு பார்க்க அனுமதி கொடுத்தீங்களே .... அதைப்போலவா ??


M Ramachandran
ஏப் 25, 2025 20:25

இதுமாதிரி இலங்கையிலும் சர்ச்சில் குண்டு வெடிப்பு நடத்தினார்கள்


aaruthirumalai
ஏப் 25, 2025 19:59

நன்றி! வாழ்த்துக்கள்.


Mr Krish Tamilnadu
ஏப் 25, 2025 18:58

நீங்களும் தான், தமிழா சிங்களமா?. என கேட்டு நடந்து கொள்கிறீர்கள்.அப்படி என்ன? வன்மம். கச்சதீவு ஒப்பந்தமும் நிறுத்த வேண்டிய ஒப்பந்தம் தான். பார்த்து நடந்துங்கங்க. பி.ஜே.பி. ஆட்சி தமிழகத்தில் வந்த பின்னாடி, மீனவர் மேல கை வைக்க முடியாது. 370 ரத்து செய்தபின் காஷ்மீர் திட்டங்கள் செயல்பட்ட மாதிரி, காவிரி நீர் கரெக்ட் டாக வரும். உவக லெவல் லா கட்சத்தீவு மீன்களாக ஏற்றுமதி பண்ண ஆரம்பித்து விடுவோம்.


அப்பாவி
ஏப் 25, 2025 21:59

கனவுகாணும் உரிமை எல்லோருக்கும் இருக்குன்னு கலாம் ஐயா சொல்லிருக்காரு.


சமீபத்திய செய்தி