உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: வன்முறையாக மாறியதால் நாடு முழுதும் இணைய சேவை முடக்கம்

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: வன்முறையாக மாறியதால் நாடு முழுதும் இணைய சேவை முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ல் மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர்.

ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசார் மற்றும் ராணுவப் படையினரும் தாக்கியதால் வன்முறை ஏற்பட்டது. நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் முழுவதும் இணைய சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வன்முறையில் இதுவரை 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sivagiri
ஜூலை 18, 2024 18:10

மற்ற மாநில செய்திகள் , அயல் நாட்டு செய்திகள் எதுவும் தமிழ் மீடியாக்களில் எந்த செயலிலும் வருவதில்லை , எப்பப் பாத்தாலும் , ஸ்டாலின் , பழனிசாமி , ஓ பி எஸ் , அண்ணாமலை , காவிரி தண்ணி , பெரியாறு அணைக்கட்டு , ராமேஸ்வரம் மீனவர்கள் , அப்பப்ப கொலை கொள்ளை , கொஞ்சம் சினிமா - - அவ்வளவுதான் தமிழில் இருக்கும் செய்தி சேனல்கள் மக்களுக்கு தெரிவிக்கும் நியூஸ் - - - எந்த சேனலை மாற்றினாலும் ஓரே நியூஸ்தான் ஓடும் - - விட்டால் பாத்ரூம் கழுவுவது எப்படிங்குற விளம்பரங்கள்தான் - 24-மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது . . . தினமலர் ஒரு செய்தி சேனல் ஆரம்பித்து , அனைத்து மாநில , அயல்நாட்டு , செய்திகளையும் , தகவல்களையும் , பொது மக்களுக்கு ப்ரயோஜனப்படும் அளவுக்கு - கொடுக்கலாம் . .


Pandi Muni
ஜூலை 18, 2024 19:20

நல்ல யோசனைதான்


என்றும் இந்தியன்
ஜூலை 18, 2024 17:37

1971 ல் வங்க தேசம் உருவானது???வாங்க தேசம் இந்தியவுடனேயோ பர்மாவுடனோ சண்டை போடுவதில்லை. 53 வருடம் முன்பு ராணுவ வீரன் உயிர் துறந்திருந்தால் இன்று அவன் வயது குறைந்தது 80 வயது அவன் குழந்தைகள் வயது குறைந்தது 50 வயது இன்னும் அவர்களுக்கு ஏழை கிடைக்கவில்லையா??? ஐயோ பாவம் இந்த 30% உடனே நிறுத்தப்படவேண்டும்


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 17:19

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வயதே ஐம்பதுக்கு மேலாகி இருக்கும். அவர்களுக்கு இடஒதுக்கீட்டால் பலன் இருக்காது. மற்றவர்கள் பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்பேயில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை