உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடான் மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 70 பேர் பலியான சோகம்!

சூடான் மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 70 பேர் பலியான சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கார்தோம்: சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 70 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் - புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், 'ரேபிட் சப்போர்ட் போர்சஸ்' எனும் பயங்கரவாத படைக்கும் இடையே 2023ல் போர் துவங்கியது. ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 70 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சூடானில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம். சேதமடைந்த மருத்துவ வசதிகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kumar Kumzi
ஜன 26, 2025 15:27

கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டிகளை மூர்க்கம் அழிவின் உச்ச கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது


Laddoo
ஜன 26, 2025 14:43

இஸ்லாமிய தீவீரவாதிகள் உள்ள இடங்கள் உருப்படாது.


தியாகு
ஜன 26, 2025 14:15

உலகின் கடைசி மூர்க்கன் இருக்கும் வரையில் இந்த உலகத்தில் அமைதி இருக்காது. அந்த மார்க்கம் இந்த உலகத்தை விட்டே அழித்து ஒழிக்கப்படவேண்டிய மார்க்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை