உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூப்பர் ஸ்டாருக்கு வேலை இருக்கு; சொல்லி விட்டார் சுந்தர் பிச்சை!

சூப்பர் ஸ்டாருக்கு வேலை இருக்கு; சொல்லி விட்டார் சுந்தர் பிச்சை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தில் சேர விரும்புபவர்களிடம், தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை விளக்கமளித்து உள்ளார்.'ஆல்பபெட்' நிறுவனத்தைச் சேர்ந்த கூகுள், உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்பது பலரின் லட்சியமாகவும், நோக்கமாகவும், கனவாகவும் இருக்கிறது.இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கான தகுதி குறித்து அந்த சி.இ.ஓ., சுந்தர் பிச்சை பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சூப்பர் ஸ்டார் மென்பொறியாளர்களை எதிர்பார்க்கிறது. கூகுளின் பொறியாளர் குழுவில் சேர விருப்பம் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவும், புதிய சவால்களை ஏற்றுக் கொண்டு அதில் பாடம் படித்து முன்னேறுபவர்களாக இருக்க வேண்டும். ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இது, அவர்களிடம் சமூக உணர்வை உருவாக்கவும், புதிய சிந்தனைத்திறனை தூண்டவும் உதவும். கூகுள் வழங்கும் பணியாணைகளை 90 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கின்றனர். இது கடுமையான வேலைச்சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கு இருக்கும் வலிமையை காட்டுகிறது. தொழில்நுட்ப துறையில் ஆட்கள் தேர்வு குறைந்துவிட்ட நிலையில், கூகுளில் பணிபெறுவது என்பது மதிப்புமிக்க சாதனை.ஆரம்ப கட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டி கடுமையாக உள்ளதால், அந்தப்பணிகளில் சேர விரும்புபவர்கள், தங்களை வேறுபடுத்தி காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Thangavel
அக் 13, 2024 15:25

தலைவரே அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் மென்பொறியாளர்களை கேட்கிறார், உங்களுக்கு புரியவில்லையா?


SEKARG
அக் 13, 2024 05:09

Our youngsters should develop the skills and knowledge and get the job ..we are all capable and efficient.


Raghavan
அக் 14, 2024 18:02

இங்கே கஞ்சா மது வேற என்ன என்ன உண்டோ அனைத்தையும் மாணர்வகளுக்கு கிடைக்கசெய்துவிட்டு எப்படி அவனை சூப்பர் ஸ்டார் அல்ல ஒரு லிட்டில் ஸ்டார் அல்லது ஒரு ஸ்டாராகவும் ஆகமுடியாது. நல்ல வேலை இந்த உப்பிஸ் ரிசர்வேஷன் கோட்டாவை அமல்படுத்து என்று திரு சுந்தர் பிச்சை இடம் நம் முதல்வர் அமெரிக்கா சென்றிருந்தபோது கேட்காமல் ஏன் விட்டார்?


கிஜன்
அக் 12, 2024 21:48

நீங்க எடுக்கிற ஆட்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார்கள் என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா சார் ? உங்க ஹயரிங் பிராஸசை முதலில் செக் பண்ணுங்கள் ..... ஏ.ஐ ல உங்க மாடல் தான் புவர்ஸ்டார் ... மெட்டா ... மைக்ரோசாப்ட் எல்லாம் அடிச்சு தூள் கிளப்புறாங்க ...


வைகுண்டேஸ்வரன்
அக் 12, 2024 20:56

எல்லா கம்பெனி யுமே சூப்பர் மாணவர்களைத் தான் வேலைக்கு எடுப்பார்கள். அரியர்ஸ் வெச்சிருக்கவனையா வேலை இருக்கு வா என்று சொல்வார்கள்???


karupanasamy
அக் 13, 2024 03:43

உன்னை முரசொலியோ, கயவன் டீ வீயோ, சன் நெட்ஒர்க், ரெட்ஜெயண்ட் போன்ற உன் எஜமானர்கள் கூட வேலைக்கு எடுக்கமாட்டர்ர்கள். உன்னுடைய வேல்யூ தினக்கூலியாக வெறும் இருநூறு மட்டுமே.


Ganapathy
அக் 12, 2024 20:37

ஓ..நான்கூட அலெக்ஸ் பாண்டியன சொல்லுறீங்கன்னு நினச்சேன் ?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 12, 2024 20:34

கூகுள் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய தான் தமிழகத்தின் தவப் புதல்வன் ஒரு நொடியில் அனைத்தும் மாற்றி காட்டும் சூப்பர் பவர் மேன் திரு.ரஜனி காந்த் அவர்களுக்கு சுந்தர் பிச்சை ஒரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் தந்தால் கூகுள் நிறுவனத்தையே சும்மா அதிருதில்லே என்று கூறும் அளவுக்கு மாற்றி காட்டுவார்.


Ramesh Sargam
அக் 12, 2024 20:28

Average திறமை உள்ளவர்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்கு முறையான, கடுமையான பயிற்சி கொடுத்து அவர்களை சூப்பர் ஸ்டார் ஆக்கவேண்டும்.


Srinivasan K
அக் 12, 2024 20:47

American mnc s will not do. only desi service companies will do this


RRatz
அக் 14, 2024 16:32

கரெக்ட்.


Barakat Ali
அக் 12, 2024 20:01

சிஸ்டம் சரியில்ல என்று எப்போதோ கூறிய ரஜினியைத்தான் கூகுளில் பணியாற்ற கூப்பிடுகிறாரோ என்று நினைத்துவிட்டேன் ....


theruvasagan
அக் 12, 2024 22:10

ஓஹோ. அப்ப அன்னிக்கு சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னது அவரு வீட்டுல இருக்குற சிஸ்டம் பத்திதானா. நான்தான் வேற என்னவோ ஏதோன்னு நெனைச்சுட்டேனா. சரி. சிஸ்டத்தை சர்வீஸ் பண்ணி சரி செஞ்சு குடுத்துட்டாங்களா. அதுக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் வாயே தொறக்கலை.