உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் வீடியோவால் சர்ச்சை: நாசா சொல்வது இதுதான்

விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் வீடியோவால் சர்ச்சை: நாசா சொல்வது இதுதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். இது குறித்த வீடியோ வெளியான நிலையில், நெட்டிசன்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். இதற்கு நாசா விளக்கம் அளித்து உள்ளது.ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். அவர்கள் அடுத்த ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h1b7kts3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா அமைப்பு சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. இதனை பார்த்த, நெட்டிசன்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தனர்.*விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருப்போம் என அவர்களுக்கு தெரியுமா*கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை நீண்ட நாட்களுக்கு முன்னரே கொண்டு வந்து விட்டீர்களா*8 நாட்கள் மட்டுமே விண்வெளி பயணம் என சொன்னவர்களிடம் எப்படி தொப்பிகள் வந்தன*கிறிஸ்துமஸ் தொப்பிகள், அலங்காரங்களை யார் விநியோகம் செய்தது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.இதனையடுத்து நாசா அமைப்பானது வீடியோ குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த நவம்பர் மாதம், இந்த கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்கார பொருட்கள் ஸ்பேஸ் எக்ஸ் மூலம், அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், துண்டுகள் மற்றும் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில அறிவியல் பொருட்களும் இருந்தன. இவ்வாறு அதில் நாசா கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
டிச 26, 2024 07:12

அங்கேயே இன்னும் நாலு வருஷம் இருங்க. அடுத்த பார்சல் அனுப்பி வெப்பாங்க.


வல்லவன்
டிச 25, 2024 23:24

அப்போ தேன்நிலவுனு சொல்லுங்க


Karthik
டிச 25, 2024 22:12

அங்கே போனவர்களுக்கு தெரியாது . அனால் அனுப்பியவர்களுக்கு தெரியும் சாதனைக்காக அவர்கள் ஓராண்டு தங்கியிருக்க வேண்டுமென்று . முன்கூட்டியே சொன்னால் போக ஆளும் கிடைக்காது அனுமதியும் கிடைக்காது . எல்லாம் ஒரு Professional Ethics தான் .


Saai Sundharamurthy AVK
டிச 25, 2024 21:49

சுனிதா வில்லியம்ஸுக்கு உடல் நலம் நன்றாகத் தான் உள்ளது என்று தெரிகிறது. இந்த பயணம் நீண்ட கால ஆராய்ச்சிப் பயணமாக நாசாவால் திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் புரிகிறது. ஆகவே, உருட்டுவதை நாசா நிறுத்த வேண்டும்.


Ganapathy
டிச 25, 2024 20:37

அப்படியே கொஞ்சம் தீவாளி கார்திகை கொண்டாட "பச்சை அணுவெடிகளையும் ராக்கெட்டுகளையும் " அனுப்பிவைங்கப்பா.


ManiK
டிச 25, 2024 20:33

வின்வெளி பயணத்தையும் உங்க மத மாற்றுக்கு பயன்படுத்துரீங்களே!!?.


Anantharaman Srinivasan
டிச 25, 2024 19:11

So தொடர்ந்து 7 மாதங்களாக விண்வெளியில் தங்கவேண்டியிருப்பதற்கு அவர்கள் கவலைப்படவில்லை போலும்.


Barakat Ali
டிச 25, 2024 18:31

முதலில் நிலவுக்குப் பயணம் செய்ததாக உருட்டியவர்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை