உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டேபிள் டென்னிஸ்: இந்தியா சாதனை

டேபிள் டென்னிஸ்: இந்தியா சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரானா: டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் இரட்டையர் பிரிவில் முதன் முறையாக இந்தியா பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. பிரேசிலில் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, 3-2 என்ற செட் கணக்கில் (5-11, 11-9, 11-6, 8-11, 11-5) தென் கொரியாவின் ஹுவான் செங், குவான் ஹாங் ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, 3-0 என (11-7, 11-2, 11-7) சிலியின் நிகோலஸ், பவுலினா ஜோடியை சாய்த்து பைனலுக்குள் நுழைந்தது. உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியா பைனலுக்கு முன்னேறியது இது தான் முதன் முறை. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சக வீராங்கனை தியாவை 3-1 என (11-9, 9-11, 11-9, 15-13) என வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 03, 2025 11:59

இந்திய மக்கள் இதுபோன்ற வெற்றிகளையும் கொண்டாடவேண்டும். எப்பொழுதும் கிரிக்கெட் தானா? வாழ்த்துக்கள் டேபிள் டென்னிஸ் வீரர்களே.