உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வைரஸ் தாக்கிய குரங்குகள் தப்பியதால் அமெரிக்காவில் பதற்றம்

வைரஸ் தாக்கிய குரங்குகள் தப்பியதால் அமெரிக்காவில் பதற்றம்

மிசிசிபி: அமெரிக்காவின் மிசிசிபி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஆய்வகக் குரங்குகளை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்தது. அதில் இருந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்ட குரங்குகள் தப்பியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் லுாசியானாவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட குரங்குகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு டிரக் வாயிலாக நேற்று முன்தினம் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டன. மிசிசிபியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் அந்த டிரக் கவிழ்ந்தது. இதில் அதில் இருந்த சில குரங்குகள் தப்பியோடிவிட்டன. இந்தக் குரங்குகள், பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதனால், இவற்றின் வாயிலாக, ஹெபடிடிஸ் சி போன்ற வைரஸ்கள் பரவும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரங்குகளை தேடிப் பிடிக்கும் பணியில் பல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எத்தனை குரங்குகள் தப்பின என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ