உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர ஏற்பாடு!

அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர ஏற்பாடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.கடந்த 2024ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தில் ஹேப்பி பாசியா எனப்படும் ஹர்ப்ரீத் சிங்கிற்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதியான இவனுக்கு எதிராக, கடந்த ஜன., மாதம் ஜாமினில் வெளியே வர முடியாதபடி, பிடிவாரண்ட்டை என்.ஐ.ஏ., பிறப்பித்திருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3skeg5xw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட பஞ்சாப்பில் 14 குண்டுவீச்சு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ஹேப்பி பாசியாவுக்கு, 2 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., அமைப்பினருடன் நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளான். மொத்தம் 18 குற்ற வழக்குகளில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த ஹேப்பி பாசியாவை, கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேப்பி பாசியாவை, விரைந்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியா அழைத்து வரப்பட்ட பிறகு, பல்வேறு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sasikumaren
ஜூலை 08, 2025 03:52

அமெரிக்காவில் அகப்பட்ட பயங்கரவாதியை சவ பெட்டியில் அடைத்து இந்தியாவுக்கு விமானத்தில் கொண்டு வர வேண்டும்.


spr
ஜூலை 07, 2025 17:18

தீவிர வாதம் வேறு பயங்கர வாதம் வேறு. ஒரு கொள்கையில் அதீதமான நம்பிக்கை உள்ளவராக இருந்து அதனைப் பரப்புவோர் தீவிர வாதிகள் ஆனால் அக்கொள்கையைப் பரப்ப ஆயுதம் ஏந்துவது மக்களைக் கொலை செய்வது பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது என்பதெல்லாம் பயங்கர வாதம் தீவிர வாதம் கூட மக்களுக்கு அச்சுறுத்தல், பொருட் சேதம் இல்லாத வரை ஏற்கப்படலாம் பயங்கர வாதம் இந்தக் காரணம் கொண்டும் யார் செய்தாலும் எந்த ஒரு நோக்கத்திற்காகச் செய்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே. இந்தியாவின் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், வழக்காடுபவர் அதனைப் பயன்படுத்தி அவர்களை விடுவிக்கும் முறை, விசாரணை அதிகாரிகளின் ஊழல் நீதி வழங்கும் முறை எல்லாம் முறையான தண்டனை தருவதில்லை என்பது அறிந்தும் அந்நிய நாடுகளில் சிறையில் இருக்கும் பயங்கர வாதிகளை விசாரணைக்காக கொண்டு வருவது சரியல்ல அவர்கள் தப்பித்து விடுவார்கள். இந்த முடிவு குற்றம் புரிந்தவர் வெளிநாடு சென்றாலும் கொண்டு வந்து விசாரிப்போம் என்று மோடி அரசுக்கு விளம்பரம் மட்டுமே அந்த அரசுகளே கோரிக்கை வைக்காத வரைஅவர்களை அந்த நாட்டுச் சிறையில் இருக்க விடுவதே நல்ல முடிவு நம் நாட்டுச் சிறைகளைவிட அங்கே கட்டுப்பாடும் பாதுகாப்பும் அதிகம் சலுகைகள் குறைவு


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2025 17:01

முஸ்லீம் தீவிரவாதிகள்??? சீக்கிய தீவிரவாதிகள்??????இந்துவை ஒழிக்க நினைக்கும் இந்துவாக இருக்கும் திமுக, காங்கிரஸ்......தீவிரவாதிகள்


Ahamed Thaha
ஜூலை 07, 2025 15:06

இஸ்லாம் அல்லாதவர்களும் தீவிரவாதம் செய்தால் அவர்களையும் தீவிரவாதி எனக்குறிப்பிடுவார்களா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை