உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தாய்லாந்து, கம்போடியா உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்தே, தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவது அவரது வழக்கம். இஸ்ரேல்- ஈரான் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை சொல்லி உள்ளார். தற்போது, தாய்லாந்து-கம்போடியா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தான் முயற்சி செய்து வருவதாக டிரம்ப் கூறி உள்ளார். இது குறித்து, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: எல்லை மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டன. இரு தரப்பினரும் அமைதியை நாடுகின்றனர். அதேநேரத்தில் சர்வதேச அமைப்புகள் நீண்டகால தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஸ்காட்லாந்தில், கம்போடிய பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாயுடன் தனித்தனியாகப் பேசினேன்.தொடர்ந்து சண்டையிடுவது அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் இரு தலைவர்களையும் எச்சரித்தேன். இவ்வாறு அவர் கூறினார். மூன்று நாட்களாக நீடித்த தாய்லாந்து- கம்போடியா எல்லை மோதல்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர் 1,30,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் நடவடிக்கை எடுத்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சண்முகம்
ஜூலை 27, 2025 22:06

எல்லாம் அவன் செயல்.


KRISHNAN R
ஜூலை 27, 2025 13:07

டிரம்ப் புடின் கிம்ஜாங் ஜெலன்ஷி சிங் பிங்க்..... இந்த ஐந்து பேர் ஒரே ரூமில் அடைக்கவும்.... நன்றி..


Ramesh Sargam
ஜூலை 27, 2025 12:15

என்ன இன்னும் நம்ம பெரிய அண்ணன் ட்ரம்ப் தாய்லாந்து - கம்போடியா போரில் மூக்கை நுழைக்கவில்லையே என்று நெனெச்சேன், உடனே நுழைச்சிட்டார். ஆனால் அவர் நாட்டில் நடக்கும் பல விஷயங்களுக்கு நம்ம பெரிய அண்ணனால் ஒரு முடிவும் காணமுடியவில்லை. அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து சந்தேக நபர் கைது. முன்னாடி துப்பாக்கி சூடு. இப்ப கத்திக்குத்து.


Jay
ஜூலை 27, 2025 12:07

சரியாக சொன்னீர்கள், ஆழ்ந்த அரசியல் அறிவுடன்.


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 27, 2025 09:18

எனக்கு என்னமோ இவர்தான் இந்த போரை ஆரம்பித்து விட்டு இருப்பார் என்று தோணுகிறது.. போரை ஆரம்பித்தால்தானே முடிவுக்கு கொண்டு வர முடியும்..நோபல் பரிசு வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்..அமைதியாக இருந்த காஷ்மிரில் இவர் ஆட்சி அமைந்தவுடன் பிரச்சினை ஆரம்பித்தது..இவரை அழைக்காமல் மத்தியஸ்தம் செய்ய வந்தார்.தன்னைப் பெருமையாக பேசிக்கொண்டார்..வளர்ச்சியடைந்த நம்மையும், பின்தங்கிய நிலையில் இருக்கும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து பேசினார்.பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து அளித்தார்.. இவர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும்...


கலைஞர்
ஜூலை 27, 2025 08:55

ஸ்டாலினின் வழியில் டிரம்ப்


Jack
ஜூலை 27, 2025 09:00

இவருக்கும் பேஸ் மேக்கரா ?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2025 08:38

சட்டுபுட்டுன்னு இவருக்கு நோபல் பரிசுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பு ....... ஸ்டிக்கரைத் தூக்கிட்டு வந்துடுறாரு .....


Palani Raja
ஜூலை 27, 2025 08:35

தமிழக முதல்வர் அவர்களின் திட்டம் அமெரிக்கா அதிபர் வரை சென்று சேர்ந்து இருக்கிறது. ஸ்டிக்கர் ஓட்டுவதில் திமுக பிற மாநிலங்களுக்கு மட்டுமல்ல பிற நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது


VENKATASUBRAMANIAN
ஜூலை 27, 2025 08:06

ட்ரம்ப் நாட்டாமை ஆகிவிட்டது. எல்லா போர்நிறுத்தம் அறிவிப்பும் இவர்தான் கூறுகிறார். ஆனால் யாரும் இதை மதிப்பதில்லை


Saai Sundharamurthy AVK
ஜூலை 27, 2025 08:06

வர வர இவரும் ஸ்டிக்கர் மாடல் ஆகி விட்டார். ஒரு பக்கம் போரை தூண்டி விடுவது. இன்னொரு பக்கம், இரண்டு நாடுகளுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி போரை நிறுத்தி விட்டால் உடனே தான் தான் போரை நிறுத்தியதாக மார்தட்டிக் கொள்வது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை