உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆட்டம் இன்னும் முடியவில்லை அணுசக்தி திட்டங்கள் தொடரும்: ஈரான் திட்டவட்டம்

ஆட்டம் இன்னும் முடியவில்லை அணுசக்தி திட்டங்கள் தொடரும்: ஈரான் திட்டவட்டம்

டெஹ்ரான்: ஈரான் அணுசக்தி திட்டங்களை குறி வைத்தே, அதன் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தின. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், 'எங்களுடைய அணுசக்தி திட்டங்கள் தொடரும்' என, ஈரான் கூறியுள்ளது.ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் 'ஈரான் அணுசக்தியை அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது; அது எங்களை குறிவைக்கும்' என்று, இஸ்ரேல் கூறியது.இதையடுத்தே, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறுகின்றன.ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது இஸ்லாமி, இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட 'ஆட்டம் இன்னும் முடியவில்லை. இதுபோன்று தாக்குதல்கள் நடந்தால் எப்படி யுரேனியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு ஏற்கனவே திட்டங்கள் வகுத்து வைத்திருந்தோம்'என்று கூறியுள்ளார்.அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டால், மீண்டும் உற்பத்தியை துவங்குவது தொடர்பாக விரிவான திட்டங்கள் தங்களிடம் உள்ளதாக அவர் கூறி உள்ளார். இதன் வாயிலாக, யுரேனியம் செறிவூட்டல் பணிகள் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்வதற்கு எப்போதும் தயாராகவே இருந்தோம் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.தற்போதைக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், யுரேனியத்தை செறிவூட்டுவது, அணுசக்தி திட்டங்கள் எப்போதும்போல் தொடர்ந்து நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:54

சுற்றியுள்ள SUNNI அரபு இஸ்லாமிய நாடுகள் எதுவுமே ஈரானை ஆதரிக்கவில்லை. பாலஸ்தீன தனிநாடு உருவாவதிலும் பெரும் ஆர்வமில்லை. இஸ்லாத்தின் பெயரில் பயங்கரவாதம் செய்யும் ஈரானில் சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அமெரிக்க ராணுவதளங்களை அமைக்கவும் இடமளித்துள்ளனர். பாதிக்கு மேல் ஏழைகள் நிறைந்த ஈரானின் அழிவு நெருங்குகிறது.


SASIKUMAR a
ஜூன் 25, 2025 09:48

இவ்வளவு தெளிவாக பேசுகிறாய் அப்ப இஸ்ரேல் வைத்து இருக்கலாம் அமெரிக்கா வைத்து இருக்கலாமா? அவர்கள் அனு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இருக்க இடம் கொடுத்தவர்களையே அடித்து விரட்டும் காட்டுமிராண்டி துரோகி இஸ்ரேல்


rama adhavan
ஜூன் 25, 2025 09:28

சவடால் பேச்சு இது. இனியும் ஆக்கும் வேலை தொடர்ந்தால் அதை அழிக்கும் வேலையும் நடக்கும் மேலும் தீவிரமாக. மேலும் நாடும் அழியும்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 07:15

இஸ்ரேலின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் கதிர்வீச்சு அதன் எல்லையிலுள்ள முஸ்லிம் நாடுகளையும் மோசமாக பாதிக்கும். இதனையறியாமல் இங்குள்ள போலி அமைதி மார்க்க ஆட்கள் ஈரானை ஆதரிக்கின்றனர்.


Haja Kuthubdeen
ஜூன் 25, 2025 08:50

இஸ்ரேல் என்ற அமெரிக்காவின் கள்ள குழந்தை மத்திய கிழக்கில் இருக்கும் வரை அமைதி என்பதே இருக்காது...அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு பயந்து வாழலாம்..ஈரான் அப்படி அல்ல...அமெரிக்காவிடம் அனு ஆயுதம் இருக்கும் வரை உலகில் மற்ற நாடுகளும் வைத்து கொள்ளும்.பிரான்ஸ்..ரஸ்யா..சீனா..வட கொரியா..பாக்கிஸ்தானிடம் இல்லையா!!!!


Haja Kuthubdeen
ஜூன் 25, 2025 08:57

கதிர் வீச்சு அரபு நாட்டை மட்டுமல்ல சுற்றி இருக்கும் அனைத்து நாட்டையுமே பாதிக்கும்.ஒரே வழி உலகில் எவனிடமும் அனு ஆயுதம் இருக்கவே கூடாது...நான் கையில் வைத்து கொண்டு அடுத்தவரான உங்களிடம் வச்சுக்காதே என்றால் ஏற்று கொள்வீரா!!???


Elango S
ஜூன் 25, 2025 11:39

அழியட்டும் போர் என்று வந்து விட்டால் அதன் பிறகு அழிவை பற்றி எல்லாம் நினைக்க முடியாது


ameen
ஜூன் 25, 2025 12:18

இஸ்ரேல் ஈரானின் அணுகுண்டு போட்டால் இந்தியாவும் பாதிக்கப்படும்.. ஆனால் அணுகுண்டு இருக்கும் நாட்டின் மீது மற்றொரு நாடு அணுகுண்டு போட பயப்படும்...அதனால் ஈரான் அணுகுண்டு தயாரிப்பது இந்தியாவிற்கு நலன் ஆகும்...


Bahurudeen Ali Ahamed
ஜூன் 25, 2025 13:47

இஸ்ரேலிடமும்தான் அணுகுண்டு இருக்கிறது அவர்கள் அணுகுண்டை எதிரி நாடுகளில் போட்டால் அங்கும்தான் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் தான் அணுகுண்டு வைத்திருக்கலாம் அடுத்தவன் வைத்திருந்தால் அல்லது உருவாக்க நாடினால் அவன் எங்கள்மீது பயன்படுத்துவான் என்று கூப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம் அணு ஆயுதம் மற்ற நாடுகள் வைத்திருக்க கூடாது என்று விரும்பினால் நீயும் வைத்திருக்க கூடாது அதுதான் நியாயம்


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:41

சர்வாதிகாரிகளின் கட்டுபாட்டில் அணு ஆயுதங்கள் இருப்பதற்கும் பொறுப்புள்ள ஜனநாயக நாட்டிடம் இருப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.


Bahurudeen Ali Ahamed
ஜூன் 25, 2025 18:20

திரு ரங் அவர்களே பொறுப்புள்ள ஜனநாயக நாடு இஸ்ரேலா? அப்பாவி பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆட்டையைப்போட பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் பாராமல் கொத்துக்கொத்தாக கொன்று குவித்த அயோக்கிய சிகாமணிகள் உங்களுக்கு ஜனநாயக நாடா? நீங்கள் சர்வாதிகார நாடு என்று குறிப்பிடும் ஈரானிடம்தான் இந்தியா பெட்ரோல் வணிகம் செய்கிறது சிலநாட்களுக்கு முன்புதான் நமது பிரதமர் ஈரான் அதிபரை சந்தித்தார், உங்களுக்கு இஸ்லாமியோபோபியா இருக்கிறதென்று நினைக்கிறேன் தயவுசெய்து மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 22:13

முந்நூறுக்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்ரேலியப் பெண்களையும் குழந்தைகளையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து பாலியல் சீண்டல் செய்தாலும் எந்த மதம் எனப் பார்த்துதான் முடிவுக்கு வருவீர்கள்?


Bahurudeen Ali Ahamed
ஜூன் 26, 2025 15:36

திரு ரங் அவர்களே 300க்கும் மேற்பட்ட பெண்களை பிணைக்கைதிகளாக பிடித்ததை கொடுமையென்று சொல்லும் நீங்கள் 30000க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றவர்களை கண்டிக்காததேன் இறந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலா? மேலும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுவர்கள் இஸ்ரேலிய சிறையில் பல தசாப்தங்களாக வாடுகிறார்களே அவர்களைப்பற்றி என்றாவது வருத்தப்பட்டதுண்டா, உங்களிடம் விவாதித்து பயனில்லை நீங்கள் கண்ணை கட்டிவிட்ட குதிரை போன்றவர்கள் உங்களுக்கு முன் உள்ளதுமட்டும்தான் தெரியும் பக்கவாட்டில் நடப்பதை பார்க்கமாட்டீர்கள் அல்லது விரும்ப மாட்டீர்கள்


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 25, 2025 07:07

ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்றே அடுத்த இலக்காக இருக்க வேண்டும், ஈரானை மதசார்பற்ற ஜனநாயக நாடாக்க வேண்டும். வாழ்க மதசார்பின்மை, வாழ்க ஜனநாயகம்.


Haja Kuthubdeen
ஜூன் 25, 2025 08:53

இருக்கும் அனைத்து மக்களுமே 99.9% முஸ்லிமா இருக்கும் நாட்டில் எப்படி மத சார்பிண்மை ஏற்படும்...அடுத்தது இரான் பல்லாயிரம் ஆண்டுகளாக பாரசீக பேரரசாக இருந்ததா வரலாறு...


Naga Subramanian
ஜூன் 25, 2025 06:49

பாகிஸ்தானுக்கே இடம் கொடுக்கும் அமெரிக்கா, ஏன் ஈரானுக்கு தர மறுக்கிறது? இந்தியா வளர்ந்து விடக்கூடாது என்பதால் பாகிஸ்தானுக்கு அனைத்து சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இதுவே உண்மை.


Rajasekar Jayaraman
ஜூன் 25, 2025 06:45

இதர்க்கு அமெரிக்க ஜோக்கர் பதில் என்ன?


Jack
ஜூன் 25, 2025 06:12

விநாச காலே விபரீத புத்தி