உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீய சக்தி அழிந்துவிட்டது: யாஹ்யா சின்வர் பலி குறித்து இஸ்ரேல் பிரதமர் பேச்சு

தீய சக்தி அழிந்துவிட்டது: யாஹ்யா சின்வர் பலி குறித்து இஸ்ரேல் பிரதமர் பேச்சு

ஜெருசலேம் : தீய சக்தி அழிந்துவிட்டது என ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் நேற்று கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறினார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு மூளையாக செயல்பட்டது யாஹ்யா சின்வர் என கூறப்படுகிறது.இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.நேற்று காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்தது.இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நேற்று வீடியோ வெளியிட்டு பேசியது, ஹமாஸ் தலைவரின் மரணத்தை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் தீமைக்கு மரண அடி விழுந்துள்ளது. தீய சக்தி அழிந்துவிட்டது. பிணை கைதிகளை விடுவிக்கும் வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. யாஹ்யா சின்வர் மரணம் ஹமாஸின் தீய ஆட்சியின் வீழ்ச்சியில் ஒரு முக்கிய அடையாளமாகும் என்றார்.

பைடன் பாராட்டு

நேற்று யாஹ்யா சின்வர் பலியானது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார். விரைவில் தொலை பேசி வாயிலாக பேச உள்ளதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

N.Purushothaman
அக் 18, 2024 09:05

ஹமாஸை ஒழித்துக்கட்டும் அதே வேளையில் பாலஸ்தீனத்தை நாடாக அறிவித்து அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி நடக்க வைத்தால் தான் எதிர்கால இஸ்ரேல் அமைதியுடன் இருக்கும் .... உலக நாடுகள் அதை செய்ய வேண்டும் ....


RAMAKRISHNAN NATESAN
அக் 18, 2024 08:44

தனது மார்க்கத்தவர் தறிகெட்டுப்போனால் அவர்களைத் திருத்த யூதர்களை அனுப்பினான் ஏகன் ....


Kasimani Baskaran
அக் 18, 2024 05:42

வாக்கி டாக்கிகள் மற்றும் பேஜர்களை அனுப்பி மிச்சமிருப்போரையும் போட்டுத்தள்ள வேண்டும்.


J.V. Iyer
அக் 18, 2024 04:53

இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டுக்கள். ஹிந்துஸ்தான் பிரதமர் இதுபோல செய்யவேண்டும். வரும் முன் காப்பதே நல்லது. இப்போதே தேசவிரோத விஷக்கிருமிகளை களையவேண்டும். அல்லது பூமியின் சுடுகாடாக இருக்கும் போர்க்கிஸ்தானுக்கு தீய சக்திகளை அனுப்பவேண்டும். முதலில் இருப்பது ராவுல் வின்சி.


thonipuramVijay
அக் 18, 2024 04:35

சுவீட் எடு ... கொண்டாடு .... என்ன இந்த தீவிரவாதிகளெல்லாம் பிச்சைக்காரர்கள் போல தெரிகிறார்கள் ...


Natarajan Ramanathan
அக் 18, 2024 04:15

தீயசக்தி 2018 ஆகஸ்ட் ஏழு அழிந்துவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை