உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்

ஜார்ஜியா: ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j3kzm2sp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று ஜார்ஜியா. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்து மக்கள் வசித்து வருகின்றனர்.

ஹிந்து மதத்திற்கு புகழாரம்

இம்மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர்.' சமீபத்திய ஹிந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இது தொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்கிறோம்' என்றும் சபையில் தெரிவித்தனர். உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும். தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து ஹிந்து மதம் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும். தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.ஹிந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த பெருமையை ஜார்ஜியா பெறுகிறது. இதனை ஹிந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

முஸ்லிமுக்கு ஆதரவாக சட்டம்

முஸ்லிம் மதம் குறித்து அவதூறு செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் அளவுக்கு ஆப்பிரிக்க சட்டத்தில் இடம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Sampath Kumar
ஏப் 14, 2025 16:54

இழிவு படுத்த ஹிந்து தத்தில் என்ன இருக்கு ? அது ஒரு மதமே இல்லை அது ஒரு நடைமுறை பழக்கம் அம்புட்டு தான் ஆர்யா கும்பலும் அதன் துதி பாட்டிகளும் ஓன்று சேர்ந்து அமெரிக்கா காரனை தூண்டி விட்டு தங்கள் காரியத்தை சாதித்து கோடர்கள் உலகம் பூரா இப்படி தானே பரவு நீர்கள் ஆனல் அது இனி மேலும் நீடிக்காது போவியா


Sun Samadh
ஏப் 15, 2025 07:41

உண்மை


xyzabc
ஏப் 14, 2025 10:58

தமிழ்நாடு, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் ல இந்துக்களுக்கு மரியாதை இல்லை.


Mohan Kulumi
ஏப் 14, 2025 09:22

நல்லவேளை திமுக காரன் தி காக்காரன் எவனும் அங்க போய் இந்து மதத்தை இழிவுபடுத்தி முடியாது .


Palanisamy T
ஏப் 14, 2025 09:07

1. மதத்திற்கு சட்டரீதியில் பாதுகாப்பு கொண்டுவந்ததே தப்பு. மற்றவர்கள் புத்திக் கெட்டுச் செய்தால் நாமும் அதே தவரைச் செய்யவேண்டுமா? இதில் தேவையில்லாமல் பேரறிவும் மிகுந்த அறிவாற்றலும் கொண்ட ஒருச் சில பொறுப்பற்ற திமுக தலைவர்களை இதற்குள்ளே கொண்டு வரவேண்டாம். கடவுள் கொடுத்த மூளையை இவர்கள் சரிவர பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஹிந்துமதத்தில் மட்டும்தான் குறைகளுள்ளதா? மூளை இருந்தால் தானே செயல்படுவதற்கு குறைகள் மற்ற மதங்களில் இல்லையா? ஒருக் காலகட்டம் அங்கு வரும். ஹிந்து மதத்திற்கு எதிராக போராட்டம் தோன்றும். அதற்க்கு இவர்கள் சட்ட ரீதியில் சந்திப்பதற்ற்க்கு தயாராக யிருக்கவேண்டும். அந்த ஊர் இந்திய நாட்டிலில்லை. அவர்களால் அப்போது பதில் சொல்லமுடியாது


Vasudevan
ஏப் 14, 2025 08:32

படித்த மேல் தட்டு ஹிந்துக்கள் ஓட்டு போடுவதே இல்லை. கீழ் தட்டு மக்கள் காசு குவாட்டர் பிரியாணிக்கு ஓட்டு. முஸ்லீம் கிறிஸ்டின் மொத்த ஓட்டு இது போல் ஹிந்துக்களை கேலி செய்து பேசினால். இல்லையென்றால் பிஜேபி உள்ளே வந்து விடும். இப்படி பயமுறுத்தி மொத்த minority ஓட்டும் வருவதால் எவ்வளவு ஆபாசம் கேவலமாக பேசினாலும் தமிழ் நாட்டு ஹிந்துக்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை. அண்ணாமலை, மாரிதாஸ் எவ்வளவு சொன்னாலும் காதில் விழுவதில்லை.


ராமகிருஷ்ணன்
ஏப் 14, 2025 07:00

ஆபாச அமைச்சரை பற்றி அமெரிக்காவில் புகார் தரலாமா. தமிழகத்தில் யாரும் தரவில்லை எனவே அமெரிக்காவில் தரலாம்.


Kalyanaraman
ஏப் 14, 2025 06:47

அமெரிக்க இந்துக்களுக்கு பாராட்டுக்கள். நம் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இது போன்ற சட்டங்கள் தேவைப்படுகிறது. கடவுள் கருணையால் வரும் 2026 தேர்தலுக்குப் பிறகு இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் நடைமுறைக்கு வரும் என்று நம்பலாம்.


Iyer
ஏப் 14, 2025 06:22

உலகெங்கும் - குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் - ஹிந்து மதம் பெருகிக்கொண்டு வருகிறது , தானாக முன்வந்து ஹிந்து கோயில்கள் கட்டி ஹிந்து கலாச்சாரங்களை பின்பற்றிவருகின்றனர் .


xyzabc
ஏப் 14, 2025 05:08

கோவில்களை இடிக்கும் கப்பல் பாலு, இந்து மதத்தையும், இந்து மக்களையும் இழிவு செய்யும் 2ஜி ராஜா, பொன்முடி, மத வெறி பிடித்த தி மு க வினர் படிக்க வேண்டிய விஷயம்.


Mani . V
ஏப் 14, 2025 04:29

இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஒரு திக திமுக காரனும் வெளியில் திரிய முடியாது.