யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் விலகிய அமெரிக்கா
வாஷிங்டன்:ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது யுனெஸ்கோ. இந்த அமைப்பு, பொது அறிவு கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பான, பிளவுபடுத்தும் கலாசாரத்தை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டி, அதில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். யுனெஸ்கோவை விட்டு அமெரிக்கா வெளியேறுவது இது மூன்றாவது முறையாகும். டிரம்ப் நிர்வாகத்தில் இது இரண்டாவது முறை. கடந்த 2017ல், பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் வெளியேறியது. அதற்கு முன், 1984ல் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, அமெரிக்கா விலகியது.