உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்த தீர்ப்பு: வழங்கியவர் நீதிபதி அருண் சுப்பிரமணியன்!

அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்த தீர்ப்பு: வழங்கியவர் நீதிபதி அருண் சுப்பிரமணியன்!

வாஷிங்டன்: அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன், நான்காண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிபதி அருண் சுப்பிரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன்பாடகர் சீன் டிடி கோம்ப்ஸூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இவர் அளித்த தீர்ப்பு பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நீதிபதி அருண் சுப்பிரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zwzvjzbf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2022ம் ஆண்டு ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட சுப்பிரமணியன் முதல் தெற்காசிய நீதிபதி என்ற வரலாற்றை உருவாக்கினார். மோசடி வழக்குகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மீட்க, அவரது பணி உதவியாக இருந்துள்ளது. இவர் அதிகாரத்தை பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையை அடிப்படையில் பல்வேறு வழக்குகளை கையாண்டு இருக்கிறார்.சமீபத்தில் வழக்கு விசாரணை போது வழக்கறிஞர்கள் குழு பற்றி அவதூறாக பேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் மார்க் ஜெராகோஸை தனிப்பட்ட முறையில் கண்டித்த போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். 45 வயதான சுப்பிரமணின் இடம் பெற்றுள்ள அமர்வு விசாரிக்கும் வழக்குகள் அனைத்து உன்னிப்பாக கவனிக்கப்படுவது வழக்கம். இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் பலரது கவனம் பெற்று இருக்கிறது.யார் இந்த அருண் சுப்பிரமணியன்?* நீதிபதி அருண் சுப்பிரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.* இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், பிட்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் வக்கீல் படிப்பும் படித்து முடித்துள்ளார்.இவர் தந்தை பெயர் சுப்பிரமணியன். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றினார். தாய் பெயர் சுந்தரி. மனைவி பெயர் சவுமியா. அருண் சுப்பிரமணியன், 2014ம் ஆண்டு வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அமெரிக்க முன்னோடித்தமிழர் விருது பெற்றுள்ளார்.* ஓகியோ மாநிலத்தின் பிரதான நகரமான கிளீவ்லாந்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் 2001ம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும், 2004ம் ஆண்டு கொலம்பியா சட்டப்பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார்.* இவர் 2004ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட எழுத்தராக பணியாற்றினார். * 2005ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை, நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இயெரார்டு லிஞ்சிடமும், 2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி உரூத் பேடர் கின்சுபர்க்கின் சட்ட எழுத்தராகவும் அருண் சுப்பிரமணியன் பணிபுரிந்து இருக்கிறார். * இவரது இந்த அனுபவம் நீதித்துறையில் சிறந்து விளங்க பெரும் உதவியாக இருந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

sankaranarayanan
அக் 04, 2025 18:25

வாழ்த்துக்கள் விரைவிலேயே அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இறைவனை பிரார்த்திகிறோம்


Chandradas Appavoo
அக் 04, 2025 17:26

இவர் பிறந்தது கூட இந்தியாவில் இல்லை


Manyan
அக் 04, 2025 17:09

இவர் அமெரிக்காவில் பிறந்த சட்டபூர்வமான அமெரிக்கர்.


சுரேஷ்
அக் 04, 2025 15:04

இப்படியான செய்திகளை இந்திய பத்திரிகைகள் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். இவரோ இவரது முன்னோர்களோ இந்தியாவா அல்லது அமெரிக்காவா என்ற கேள்வி வந்த போது அமெரிக்காதான் தங்கள் எதிர்காலம் என்று முடிவு செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள். இவர்கள் எங்கும் தங்களை இந்திய நாட்டோடு தொடர்பு உள்ளவராக காட்டி கொள்பவர்கள் இல்லை. கடின உழைப்பால் முன்னேறி தங்கள் வாழ்க்கையை பார்த்து கொண்டு அமைதியாக வாழ்பவர்கள். சமீபத்தில் இந்தியா மீது டிரம்ப் குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்த பொழுது அமெரிக்க வாழ் இந்தியர்கள் காது செவிடாகும் அளவுக்கு அமைதியாக இருந்ததே சாட்சி. அவர்கள் பற்றிய தகவல்களை தவிர்க்கவும். இதில் இந்தியாவோ இந்தியர்களோ தெரிந்து கொள்ளவோ பெருமை கொள்ளவோ எதுவும் இல்லை. நம் செய்தி நிறுவனங்கள் கவனம் இந்தியா மீதும் இந்திய இந்தியர்கள் மீதும் இருக்க வேண்டும். வாழ்க பாரதம்.


SUBRAMANIAN P
அக் 04, 2025 13:42

இவருக்கு இந்தியாவில் வேலையில்லை


Saai Sundharamurthy AVK
அக் 04, 2025 13:19

அருண் சுப்ரமணியன் பற்றிய விபரங்களை பெருமையாக புட்டு புட்டு வைத்தாகி விட்டதா ??? இப்போது டிரம்பர் இவரை எப்படி வெளியேற்றலாம் என்று யோசித்துப் கொண்டிருப்பார்...?


முதல் தமிழன்
அக் 04, 2025 13:02

அவரோ இவரு. இருக்கும். எதுக்கும் ok


N Annamalai
அக் 04, 2025 12:48

வாழ்த்துக்கள் .உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது


Kumar Kumzi
அக் 04, 2025 12:38

அதுசரி அருண் சுப்ரமணியன் தமிழ் பேசுவாரா


Iniyan
அக் 04, 2025 11:01

சுப்ரமணியதை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று நினைப்பது என்ன கஷ்டம்?