வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவர் ஒருவர் முன்னேறிவிட்டது உண்மை. அதற்காக இந்தியர் அனைவரும் முன்னேறிவிட்டதாக இவரே நினைத்துக் கொள்கிறார். யதார்த்தமான நிலை தெரியாத தற்குறிகள்!
வாய்ப்புகளை பயன்படுத்தி இந்தியா வளர்ச்சி பெற வேண்டும்
மான்செஸ்டர்: '' இந்தியாவை பொறுத்தவரை, உலகமானது சவால்களை விட வாய்ப்புகளால் நிறைந்துள்ளது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகமயமாக்கலின் முக்கியத்துவத்தை நாம் இன்று புரிந்து கொள்கிறோம். உலகமயமாக்கலின் விதிமுறைகளில் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இல்லை. அதை நியாயமாக மாற்ற விரும்புகிறோம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை உலகம் சவால்களை விட வாய்ப்புகள் நிறைந்துள்ளது. இந்தியா உலகத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது. மற்ற அனைவருக்கும் இது அப்படி இருக்காது. அது அவர்களின் பிரச்னை. வர்த்தகம், முதலீடு, மாணவர்கள் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.இந்தியா பிரிட்டன் இடையிலான உறவு வரலாற்றில் வேரூன்றிய உறவு. அந்த வரலாறு சிக்கலான வரலாறு. அதனை அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், எந்த ஒரு உறவிலும் பல விஷயங்கள் கலந்து உள்ளது. இதில், நாம் நல்ல பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.உறவுகள் வலுவடைந்து கொண்டே போகிறது.பலவீனமாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இவர் ஒருவர் முன்னேறிவிட்டது உண்மை. அதற்காக இந்தியர் அனைவரும் முன்னேறிவிட்டதாக இவரே நினைத்துக் கொள்கிறார். யதார்த்தமான நிலை தெரியாத தற்குறிகள்!
வாய்ப்புகளை பயன்படுத்தி இந்தியா வளர்ச்சி பெற வேண்டும்