உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பி விடக்கூடாது: டிரம்பை விமர்சித்த சீன அதிபர்

உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பி விடக்கூடாது: டிரம்பை விமர்சித்த சீன அதிபர்

பீஜிங்: ' உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பி விடக்கூடாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, சீன அதிபர் ஜி ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணி வகுப்புக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டுத் தலைவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.ஜப்பானுக்கு எதிரான இரண்டாம் உலகப் போரின் வெற்றி நவீன காலத்தில், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனாவின் முதல் வெற்றியாகும். உலக அமைதி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதில் சீன மக்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒருவருக்கொருவர் சமமாக, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அதற்கு அழைக்கப்படாத அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.'அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கும் உங்களுக்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னுக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Tamilan
செப் 03, 2025 21:07

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


sankar
செப் 03, 2025 19:03

பலமானவர்கள் பலவீனர்களை வேட்டையாடுவது தவறு என்றால் ஜப்பானை வென்றதை பெருமையாக கொண்டாடுவதேன் . ஒரு வேலை அந்த நேரத்தில் ஜப்பான் வலுவாக இருந்திருக்குமோ ?


chandran
செப் 03, 2025 19:51

Yes.. Japan was stronger then. Japanese imperial army was one of the invading forces during world war two.


V N Srikanth
செப் 03, 2025 20:06

MISTAKE DONE BY US AFTER WW II. THEY WANT TO CURB JAPAN WHO ARE DOING ENONOMIC WAR WITH USA BECAUSE OF HIROSHIMA / NAGASAKI REVENGE. DURING THAT TIME THE SMALL FOX US FUNDED HEAVILY TO CHINA TO MAKE IT ECONOMICALLY GOOD TO CURTAIL JAPANESE DOMINATION. THIS IS HOW USA SPOILS THE ENTIRE GLOBE BY DOING MAMA VELAI KALIYUGA SAKUNI


Ranga Srinivasan
செப் 03, 2025 20:15

சரித்திரத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு முன் மிக சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்தது. கொரியா மற்றும் சீன பிரதேசங்களில் அவர்களின் ராணுவம் செய்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது. ஜெர்மனி யூதர்களுக்கு செய்த அக்கிரமங்களை விட மோசமானது அவர்களின் அக்கிரமங்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின் இனி என்றும் இல்லை என்று தங்களது ராணுவத்தை பலப்படுத்த போவதில்லை என்ற முடிவுக்கு காரணம் அந்த சரித்திரம் தான்.


Ranga Srinivasan
செப் 03, 2025 20:59

That US forced Japan for economic reasons is far from the truth. The truth is that it was US that helped Japan rebuild their economy after WW2 which was in shambles. It was because they felt bad about what they did to Hiroshima and Nagasaki. Please read history.


Ranga Srinivasan
செப் 03, 2025 21:14

US promoted China as a manufacturing power house. There reason, they had the population to scale and support mass production. Japan could never aspire to be a manufacturing base given their population. Their strength was in electronics and later car manufacturing. Before US propped up China they were a weak and poor nation. They did the same for India. Before the IT revolution, Indian economic growth was derisively referred to as Hindu growth rate.


V N Srikanth
செப் 03, 2025 18:20

YES YOU ARE RIGHT XI. BUT WHATEVER YOU HAD MENTIONED ONLY INDIA IN THE ENTIRE WORLD IS DOING, EVEN YOU ARE CULPRIT OF OCCUPYING TIBET, FIRST LIBERATE TIBET AND THEN TALK ALL THESE THINGS. INDIA SHOULD ENSURE THAT ALL OTHER COUNTIRES COME TO HIM FOR HELP NOT IN THE OTHER WAY AROUND. IN THIS PROCESSING THE PORUKISTAN IS ALSO PART OF IT AND ANOTHER PORUKKI TURKEY AND AZERBAIJAN. FIRST XI SHOULD ELIMINATE ALL THESE PORUKKIS FROM THE TEAM AND THEN TALK ALL THESE THE ENTIRE WORLD WILL LISTEN TO YOU. NOW IT IS CHINA WHICH WANTS A RELATIONSHIP WITH INDIA BECAUSE OF 140 CRORE MARKET, SO FOR THIS YOU HAVE TO ABIDE ON ALL THE TERMS INDIA PUT AND WORK TOWARDS THAT. EVEN IN 1972 IT IS BECAUSE OF CHINA AND AMERICA THE NOTHING SPECIAL PAK WENT ON THE WAR, SO BOTH THE COUNTRIES ARE NON DEPENDABLE, THIS MODI GOVERNMENT KNOWS VERY WELL AND THEY ARE DISTANCING WELL. INDIA WILL GIVE OLIVE BRANCH ONLY IF ALL THE TERMS AND WISHES OF INDIA IS FULFILLED OTHERWISE ITWILL BE LIKE AMERICAN RELATIONSHIP DO THE BUSINESS AND GET AWAY.


Sun
செப் 03, 2025 17:30

மிஸ்டர் டிரம்ப் உங்க பாசமுள்ள பங்காளி பாகிஸ்தான விட்டுட்டீங்க ,அப்படியே சாபாஸ் ஷெரிப்புக்கும் வாழ்த்து சொல்லுங்க. அவரும்தான் அந்த குரூப்ல கலந்துகிட்டாரு. உங்களுக்கு ஒருத்தன பிடிச்சிருந்தா யோக்கியன்? இல்லன்னா அயோக்கியன்? இனிமேல உங்க பப்பு உலக நாடுகள் மத்தியில செல்லாது அப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை