உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேரம் தவறாமைக்கு பெயர் போன விமான நிலையங்கள், விமானங்கள் எவை !

நேரம் தவறாமைக்கு பெயர் போன விமான நிலையங்கள், விமானங்கள் எவை !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சர்வதேச அளவில் நேரம் தவறாமையை கடைபிடிக்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை சர்வதேச விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டு உள்ளது.விமானம் கிளம்பும் நேரம், சென்றடையும் நேரம் உள்ளிட்டவை காரணமாக பயணிகளுக்கு பதற்றமும் கவலையும் ஏற்படுவது உண்டு.விமான நிறுவனங்களுக்கு நற்பெயர் கிடைப்பதற்கான முக்கிய காரணியாக, குறித்த நேரத்தில் விமானம் இயக்கும் செயல்பாடு உள்ளது.இதனால், சரியான நேரத்துக்கு விமானம் இயக்கும் நிறுவனங்கள், நேரம் தவறாமையை சரியாக கடைபிடிக்கும் விமான நிலையங்கள் பற்றி விமான பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் உள்ளது. அவர்களுக்காகவே, விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனமான சிரியம் என்ற அமைப்பு சரியான நேரத்திற்கு செயல்படும் விமான நிலையங்கள், விமானங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி பட்டியல் வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவதுஉலகில் நேரம் தவறாமையை மிகச்சரியாக கடைபிடிக்கும் விமான நிறுவனங்கள்1. ஏரோ மெக்சிகோ2. சவுதியா3. டெல்டா ஏர்லைன்ஸ் ( அமெரிக்கா)4. எல்ஏடிஎஎம் ஏர்லைன்ஸ்(சிலி)5. கத்தார் ஏர்லைன்ஸ்6. அஜூல் ஏர்லைன்ஸ்(பிரேசில்)7. ஏவியங்கா (கொலம்பியா)8.ஐபீரியா(ஸ்பெயின்)9.ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் (டென்மார்க், நார்வே, சுவிடன்)10. யுனைட்டைட் ஏர்லைன்ஸ்( அமெரிக்கா)விமான நிலையங்கள்1. ரியாத் கிங் காலியத் சர்வதேச விமான நிலையம்2. லிமா ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையம்3.மெக்ஸிகோ சிட்டி பெனிட்டோ ஜுரேஸ் சர்வதேச விமான நிலையம்4. சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையம்5. சாண்டியாகோ ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையம்6. மின்னியாபோலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்7.வாஷிங்டன் டல்லாஸ் சர்வதேச விமான நிலையம்8. டெடராய்ட் மெட்ரோபொலிட்டன் வயானே கவுண்டி விமான நிலையம்9. ஓஸ்லோ கார்டெர்மொயன் விமான நிலையம்10 தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையம்நடுத்தர விமான நிலையங்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள விமான நிலையங்கள்பனாமா டோகுமென் சர்வதேச விமான நிலையம்ஒசாகா இடாமி சர்வதேச விமான நிலையம்பிரேசிலா சர்வதேச விமான நிலையம் ஆகியன இடம்பெற்றுள்ளன.சிறிய விமான நிலையங்கள் பட்டியலில் எல்சால்வடார் சர்வதேச விமான நிலையம், கயாகுயில் ஜோஸ் கோயாகுயின் டி ஒல்மெடோ சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அதெல்லாம் முடியாது
ஜன 07, 2025 15:44

அவர்கள் லிஸ்ட் எடுத்திருப்பது விமான நிலையங்கள் அல்ல விமானங்களை இயக்கம் நிறுவனங்களை பற்றி எப்பொழுது அதி மேதாவிகளை போல் யோசிக்காதீர்கள்


Karthik
ஜன 03, 2025 14:16

சாங்கி ஏர்போர்ட் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயர் எந்த இடத்திலும் இல்லாதபோது , நிச்சயமாக இது "விலைபோன பட்டியலே ".


DUBAI- Kovai Kalyana Raman
ஜன 03, 2025 08:38

இந்தியா ஏர்போர்ட் ஒன்னு கூட வரல லிஸ்ட்ல, இந்தியா punctuality உலக பேமஸ் ல..விமானம் லேட்டா வந்து லேட்டா ஆ போறதுக்கு ஏர்போர்ட் என்ன பண்ணும் ..punctuality லிஸ்ட் யெல்லாம் ..அந்த ஏர்போர்ட் ல இருந்து கிளம்பும் விமானம் தான் ..கரெக்ட் டைம் கு கிளம்பி இருக்கு ..நாம நாட்டுல ..வந்து போற விமானம் தான் அதிகம்


Guna Gkrv
ஜன 03, 2025 06:13

ஏன் சிங்கப்பூர் விமான நிலையம் எந்த இடத்திலும் வரவில்லை உலகிலே நம்பர் 1 ஆகா திகழும் விமான நிலையம் சிங்கப்பூர் இதில் எந்த இடத்திலும் வரவில்லை, எல்லா வகையிலும் தரமான விமானநிலையம் அப்படி இருக்க ஏன் தர பட்டியலில் வரவில்லை ?


Kasimani Baskaran
ஜன 02, 2025 23:44

உலகின் தலை சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். அது இந்த லிஸ்டிலேயே இல்லை. சேவை தரத்துக்கும் நுகர்வோரின் திருப்திக்கும் உலகின் நம்பர் ஒன். ஆக இந்த லிஸ்ட் ஒரு வேஸ்ட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை