உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது மோதலுக்கான நேரமல்ல: கயானா பார்லி.,யில் மோடி பேச்சு

இது மோதலுக்கான நேரமல்ல: கயானா பார்லி.,யில் மோடி பேச்சு

ஜார்ஜ்டவுன்: கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று அந்த நாட்டு பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தீவிரம்அடைந்துள்ள ரஷ்யா - உக்ரைன் போரை குறிக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9retgwt5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் பேசியதாவது: ஆட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் முன்னேறிச் சென்றது இல்லை. அது விண்வெளியாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, அது உலகளாவிய ஒத்துழைப்புடன் தொடர்புடையது.சர்வதேச மோதலாக மாறக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த உலகைப் பொறுத்தவரை, இது மோதலுக்கான நேரமல்ல, மோதல்களை உருவாக்கும் நிலைமைகளை கண்டறிந்து அதை அகற்றுவதற்கான நேரம். மோதலில் ஈடுபடுவதைவிட அதை உருவாக்குபவர்களை கண்டறியும் நேரம் இது. இந்த உலகில் எங்கு நெருக்கடி நிலவினாலும், முதல் ஆளாக குரல் கொடுப்பதுடன், அவர்களுக்கு உதவுவதே இந்தியாவின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
நவ 22, 2024 21:32

போனதெல்லாம் ஆயில் பேரம் பேசத்தான். யாருக்கு காண்டிராக்ட் கிடைச்சாலும் கமிஷன் வெட்டிரணும். தொழில் செய்ய முதலீடு வேணும்னா அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு சொல்லிடணும். அப்புறம் மாட்டிக்கிட்டா தலை வேதனை.


அப்பாவி
நவ 22, 2024 12:34

மோதல்.இல்லாத இடத்தில் மோதலைப் பற்றி பேச்சு.


Indian
நவ 22, 2024 08:48

நாங்க வாயிலே வடை சுடுவதில் கில்லாடிகள் ..


ghee
நவ 22, 2024 10:25

நீ பின்னாடி வழியா கூட வடை சுட தெரியாது கைலாசம்


VENKATASUBRAMANIAN
நவ 22, 2024 07:57

அப்பாவி. உன்னுடைய உண்மையான பேரை பதிவு செய். கோழை போல் ஒளிந்துகொண்டு பேசுகிறாய். இந்தியா என்றுமே போரை ஆதரித்தது கிடையாது. மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். பாகிஸ்தான் போல் இல்லை.


அப்பாவி
நவ 22, 2024 06:58

ரஷியா கிட்டே அடிமாட்டு விலைக்கு ஆயில் வாங்கி அவிங்களுக்கு உதவினோம். அதே ஆயிலை பெட்ரோலா மாத்தி ஐரோப்பாவுக்கு வித்து அவிங்களுக்கும் உதவினோம். ஐ.நா வில் ஓட்டுப் போடுவதில் பங்கேற்காமக், பாலஸ்தீனத்துக்கு மருந்து அனுப்பி உதவினோம். இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆள் அனுப்பி அவிங்களுக்கும் உதவினோம். போருக்கான நேரமில்லைன்னுட்டு தளவாடங்களை ஏற்றுமதி பண்ணி உதவுறோம். அவிங்கள்ளாம் அடிச்சிக்கலேன்னா எங்களுக்குதான் கஷ்டம்.


hari
நவ 22, 2024 08:13

தலை முதல் கால் வரை.மூளை குழம்பி கருத்து போடுவா


Duruvesan
நவ 22, 2024 06:24

மக்களை வரி போட்டு சாகடிக்க வேண்டிய நேரம்