உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ''வளமான தமிழகமாக நமது மாநிலம் வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை,'' என லண்டனில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.லண்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்போர்டு பல்கலை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்க நான் தமிழக முதல்வர், தெற்காசியாவில் அரசியலை புரட்டி போட்ட இயக்கமான திமுக இயக்கதின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல, ஈவெராவின் பேரன் என்கிற கம்பீரத்துடன் உங்கள் முன் வந்து இருக்கிறேன்.

முன்னேற்றம்

ஈவெராவின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திமுகவின் தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு, இதை விட பெருமை ஏதுவும் என்னால் இருக்க முடியாது. இந்த ஐரோப்பிய பயணத்தில் பார்த்தது, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து, ஏராளமான பேர் இங்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.தமிழகம் எல்லாவற்றிலும் முன்னேறி வருகிறது.

சாதனை

கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம், உலகத்தின் சாதனை உற்பத்தி சாதனையாக மாறி இருக்கிறது. பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. வளமான தமிழகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

panneer selvam
செப் 10, 2025 18:03

Stalin ji , your function is nothing to do with Oxford University . Speaking Infront of friends in hall rented from Oxford university is no way connected to Oxford University . Please do not fool up the people


Chandru
செப் 06, 2025 16:15

Total waste. What is surprising is a daily like Dinamalar is giving importance to this and giving it as a news. Right thinking citizens will certainly expect this daily to desist from publishing these kind of trash/photo shoot


M Ramachandran
செப் 06, 2025 01:13

சும்மா மைக்கு கிடைச்சதுனு சொல்லாதீங்க முதல்வரைய்யா? அவர் மாட்டு மெல்ல மொத்த கும்பலும் அப்படி தான்.


ராஜ்
செப் 05, 2025 20:54

அங்க 200 யூரோ வா இருக்குமோ இல்லன்னா அறிவான இவர் பேச்சை கேட்க யாரு வருவாங்க


என்றும் இந்தியன்
செப் 05, 2025 16:35

வெறும் 120 பேரா ஸ்டாலின் பேச்சுக்கு அய்யகோ என்ன கொடுமையடா இது ஸ்டாலினுக்கு??டாஸ்மாக்கினாட்டில் லட்சக்க்கணக்கில் வருவார்கள் இவர் உளறலை கேட்க வெறும் 120 பேர் மட்டும் தானா???


ராஜ்
செப் 05, 2025 20:51

எனக்கும் ஒரே ஆச்சர்யம் இவர் பேச்சையும் கேட்க 120 பேர் அங்க இருக்காங்கன்னு. அவங்களுக்கு எப்படி வெளிநாட்டில் வேலை கிடைச்சுது


Vasan
செப் 05, 2025 14:20

Yes Sir, you already TOLDED.


Sridhar
செப் 05, 2025 14:14

எதிர்க்கட்சிகள் உடனடியாக லூஸ் மோஹனுக்கோ அல்லது வடிவேலுவுக்கோ ஒரு உருவப்படம் அக்ஸ்போர்ட பல்கலைக்கழக வளாகத்தில் திறக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதற்குமுன் இவ்வளவு போலித்தனமாக யாராவது அரசியல் செய்திருக்கிறார்களா என்று ஒரு ஆராய்ச்சி செய்து அந்த கட்டுரையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கே சமர்ப்பிக்கவேண்டும்.


SUBRAMANIAN P
செப் 05, 2025 13:30

இங்க வந்து எதுக்கு இப்படி முட்டு கொடுத்துக்கிட்டு எல்லார்கிட்டயும் அசிங்கப்பட்டுக்கிட்டு இருக்க... இங்க ஒன்னும் உனக்கு தேறாது..


Anand
செப் 05, 2025 13:27

தயவு செய்து நீ அங்கேயே இருந்துக்கொண்டு உருட்டு, இங்கு வராதே.


Barakat Ali
செப் 05, 2025 13:27

மேடம்ஜி கோவில் கோவிலா போயி பிரார்த்தனை, வேண்டுதல் ன்னு அமர்க்களப்படுத்துவங்க... ஹிந்துக்கள் ஒட்டு வேணுமே ????


புதிய வீடியோ