உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு டாலர் விலையில் வீடு; அமெரிக்கர்களுக்கு ஆபர் அறிவித்த இத்தாலி கிராமம்!

ஒரு டாலர் விலையில் வீடு; அமெரிக்கர்களுக்கு ஆபர் அறிவித்த இத்தாலி கிராமம்!

வாஷிங்டன்: டிரம்ப் வெற்றியால் கோபமடைந்த அமெரிக்கர்களுக்கு இத்தாலி கிராமம் ஒரு டாலர் அல்லது ஒரு யூரோவுக்கு வீடு வழங்குவதாக ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. இத்தாலியில், பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏராளமான கிராமங்கள், சிறு நகரங்கள் காலியாகி வருகின்றன. காலியாக கிடக்கும் வீடுகளால் அந்தந்த நகர சபை நிர்வாகங்கள், ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. இதனால், உரிமையாளர் இல்லாத வீடுகளை குறைந்த விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வது இத்தாலியில் அதிகரித்துள்ளது. இவ்வாறு குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குவோர் குடியேறினால் பொருளாதாரம் வளம்பெறும் என அந்த நாட்டு அரசு கருதுகிறது.லேட்டஸ்ட் ஆக இத்தாலிய தீவான சர்டினியாவில் உள்ள ஒரு கிராம் ஒல்லோலாய் (Ollolai), அமெரிக்கர்களுக்கு அதிரடி ஆபர் அறிவித்துள்ளது. டிரம்ப் வெற்றியால் கோபமடைந்த அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அத்தகைய அமெரிக்கர்கள் வந்தால் தங்கள் கிராமத்தில் ஒரு டாலர் அல்லது ஒரு யூரோவுக்கு வீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து, ஒல்லோலாய் மேயர் பிரான்செஸ்கோ கூறியதாவது: எங்களது கிராமத்தில் அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டு உள்ளது. நாங்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தடை விதிக்க முடியாது. ஆனால் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராமம் புத்துயிர் பெற எங்களுக்கு உதவுங்கள். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமெரிக்க அதிபர் மீது கோபத்தால், பல அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர். அவர்கள் விண்ணப்பித்து, ஒரு டாலர் அல்லது ஒரு யூரோவுக்கு வீடு வாங்கி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஒல்லோலாய் கிராமத்தில் மக்கள்தொகை 2,250 இருந்தது. தற்போது மக்கள் தொகை 1300 ஆக குறைந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் புதிதாக குறைவான குழந்தைகள் மட்டுமே பிறந்தன. ஆனால், பலர் வேலை மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி கிராமத்தை விட்டு வெளியேறினர். கடந்த சில ஆண்டுகளில், மக்கள் தொகை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.புதிதாக குடியேறும் வெளிநாட்டினர், வீட்டை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்; அதே ஊரில் வசிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன் மூலம் நகர சபைகளுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை இத்தாலிய அரசு சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAAJ68
நவ 21, 2024 04:41

GIVE ME A HOUSE I WILL START IDLY VADA CHIPS SHOP.


Ramesh Sargam
நவ 20, 2024 22:24

இந்தியர்களுக்கும் அப்படி கொடுங்க சார். கொடுத்துப்பாருங்கள் உங்கள் பொருளாதாரம் அந்த அளவுக்கு வளர்ச்சி அடையும்.


Ramaraj P
நவ 20, 2024 14:19

மோடியால் தானே காங்கிரஸ் இருக்குது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 20, 2024 14:13

சொக்கத்தங்கம் எழுதிய சுய சரிதையில் ஏதாவது ஆஃபர் இருக்குமா ????


visu
நவ 20, 2024 12:54

அதெற்கென்று ஒரு குழு உள்ளது 2 பேருக்கு இடம் கொடுத்தால் நாட்டையே அவங்களுக்குதா ஆக்கிடுவாங்க


லிங்கம், கோவை
நவ 20, 2024 11:07

மோடியின் வெற்றியால் விரக்தி அடைந்த ராகுல் காந்திக்கு இந்த ஆஃபர் பொருந்துமா.


Bye Pass
நவ 20, 2024 11:19

தாய்லாந்தில் நாட்டம் அதிகம் ..


Haja Kuthubdeen
நவ 20, 2024 11:58

அடுத்தவேலைக்கு வழியில்லாமலா ராகுல் இருக்கிறார்??இந்த விசயத்தில் மோடிஜிக்கு என்ன சம்பந்தம்???


sundarsvpr
நவ 20, 2024 10:46

நிறைய குழந்தைகள் பெற்று மகிழ்வோடு வாழ்ந்தார்கள் அறுபது ஆண்டுகளுக்கு முன். . தேவைக்கு மேல் வருமானத்திற்கு ஆசைப்படவில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என்ற தாராள மனசு இருந்தது. இவைகளை கைவிட்டோம் இருக்கிறதை இழக்கிறோம்.


முக்கிய வீடியோ