உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கமேனிக்கு மூன்று நாள் இறுதி அஞ்சலி

 கமேனிக்கு மூன்று நாள் இறுதி அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்த, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, டெஹ்ரானில் மூன்று நாட்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அயதுல்லா அலி கமேனி, 86, கடந்த 36 ஆண்டுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவராக இருந்து, வெளிநாட்டு மற்றும் ராணுவ கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினார். கடந்த பிப்., 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகள் நடத்திய தாக்குதலில் இவர் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அவரது உடல், டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி தொழுகை மண்டபத்தில், இன்று இரவு 10:00 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மூன்று நாட்கள் மக்கள் வந்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதி ஊர்வலம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ