உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொராக்கோ அரசுக்கு எதிரான போராட்டத்தில் இளம் தலைமுறையினர் மூன்று பேர் பலி

மொராக்கோ அரசுக்கு எதிரான போராட்டத்தில் இளம் தலைமுறையினர் மூன்று பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரபாடா: மொராக்கோவில், 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் நடந்தி வரும் போராட்டங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். நேபாளம், வங்கதேசத்தைத் தொடர்ந்து, வடஆப்ரிக்க நாடான மொராக்கோவிலும் ஜென் இசட் எனும் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிரான போ ராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போ து நாடு முழுதும் வெடித்துள்ளது. 'ஜென்- இசட் - 212' அல்லது 'ஜென் இசட் எழுச்சி' என இப்போராட்டங்கள் அழைக்கப்படுகின்றன. கடந்த செப் ., 27ம் தேதி முதல் ரபாடா, காசாபிளாங்கா, மராகேஷ், அகாடிர் மற்றும் டான்ஜியர் உள்ளிட்ட 15 நகரங் களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள், ஜென் இசட் எனப்படும் 1990 முதல் 2010 முற்பகுதி வரை பிறந்த இளைஞர்களால் வழிநடத்தப்படுகின்றன. சமூக சமத்துவமின்மை, அரசின் ஊழல், பொருளாதார நெருக்கடி, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள், சீரழிந்த பொது சேவைகள் மற்றும் 35.80 சதவீதத்தை எட்டிய இளைஞர் வேலையின்மை ஆகியவற்றால், இளம் தலைமுறையினர் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில், அகாடிரில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் எட்டு கர்ப்பிணியர் பிரசவத்தின் போது சமீபத்தில் இறந்தனர். இந்தச் சம்பவம் இளம் தலைமுறையினரை மேலும் ஆத்திரமூட்டியதுடன், போராட்டங்களில் ஈடுபட துாண்டுகோலாகவும் அமைந்தது. இப்போராட்டத்தின் முக்கிய முழக்கமாக 'விளையாட்டு அரங்குகள் இங்கே, ஆனால், மருத்துவமனைகள் எங்கே' என்பதாக உள்ளது. பொது சேவைகளான சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதை விடுத்து, அந்நாட்டு அரசு கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து வருவதை போராட்டக்காரர்கள் கண்டித்துள்ளனர். லிக்ளியா, இனெஸ்கேன் மற்றும் ஓஜ்டா நகரங்களில் நடந்த போராட்டங்களின் போது, பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், மூன்று பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
அக் 03, 2025 11:57

சமீபத்திய மொரோக்கோ sept 23 இல் defence தொழில் துவக்கம் பிறகு இப்படி ஒரு செய்தி வருமென்று நினைத்தேன் , துருக்கி இந்த தொழில் துவக்கத்தை எதிர்த்தது . அமேரிக்கா மறைமுகமாக எச்சரித்தது . இப்போ புரியுதுங்களா GenZ


KOVAIKARAN
அக் 03, 2025 06:52

மொராக்கோ போலவே, தமிழகத்திலும் நமது தீய திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் கருணாதிக்கு சிலை, பூங்காக்கள் அமைப்பதில் என்று பலவிதமான வீண் செலவு செய்துவருகிறது. ஆனால் இங்கே யாரும் கேள்விகேட்க முடியாது. அப்படிக் கேட்டால், திமுகாவின் ஏவல் துறை உடனே அவர்களை கைது செய்யும். நேற்று தனியார் பள்ளியில் பயிற்சி செய்த RSS தொண்டர்களை கைது செய்ததைப்போல.


nagendhiran
அக் 03, 2025 06:27

துண்டப்பட்ட? போராடங்கள்? எதுவும் எழுச்சியாக நடைபெருவதில்லை?


Field Marshal
அக் 03, 2025 07:12

...மாதிரி பேசக்கூடாது


சமீபத்திய செய்தி