உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவர்களுக்குப் போட்டியாக ஆங்கிலம் படிக்கும் திபெத்தியர்கள்

இந்திய மாணவர்களுக்குப் போட்டியாக ஆங்கிலம் படிக்கும் திபெத்தியர்கள்

லாசா : ஆங்கில மொழியை, அதிகளவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்குப் போட்டியாக, திபெத்திய மாணவர்களும், தற்போது அம்மொழியை விரும்பிப் படிக்கத் துவங்கியுள்ளனர்.

திபெத்தின் பல கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் அந்நாட்டு மாணவர்கள், தற்போது, ஆங்கிலத்தை மிகவும் விரும்பிப் படிக்கத் துவங்கியுள்ளனர். ஆங்கிலம் படிப்பதன் மூலம், சீனாவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். துவக்கத்தில், அடிப்படை ஆங்கில வார்த்தைகள், பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. அவற்றிலும், எழுதுவதை விட, பேசுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள், தங்களை விட இந்திய மாணவர்கள் ஆங்கில மொழியைக் கையாளுவதில், சிறந்து விளங்குவதாகக் கருதுகின்றனர். அதனால், அவர்களோடு போட்டி போடும் வகையில், தாங்களும் ஆங்கிலம் கற்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். திபெத் தலைநகர் லாசாவில் உள்ள திபெத் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள், ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக செல்வாக்கு பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ