உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொலம்பிய அதிபர் மீது பொருளாதார தடை: டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

கொலம்பிய அதிபர் மீது பொருளாதார தடை: டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.விமர்சனம் போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் எட்டு கப்பல்களையும் அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது. மேலும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்தார். மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் சேர்த்தார் டிரம்ப்.போதைப்பொருள் ஒழிப்பு இந்நிலையில் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி, கொலம்பிய அதிபர் பெட்ரோ, மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KOVAIKARAN
அக் 26, 2025 06:59

டிரம்ப் அவர்கள் கூறுவது உண்மையே. கொலம்பியாவில் பல ஏக்கர் நிலங்களில் போதைப்பொருள்கள் வெளிப்படையாகவே விளைவிக்கப்படுகின்றன. அதற்கு அரசாங்க அதிகாரிகளும், உள்ளூர் காவல் துறையும் ஆதரவு கொடுக்கிறார்கள் அல்லது ஊக்குவிக்கிறார்கள் என்றே கூறலாம். அவர்களுக்கு மாதாமாதம் பெரிய தொகை போதை கடத்தல்காரர்களால் கொடுக்கப்படுகிறது. பொதைக்கடத்தல்காரர்களின் சம்பளப்பட்டியலில் நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உள்ளனர் என்று FBI அறிக்கை ஒன்று கூறுகிறது. நான் என்னுடைய crime thriller கதையான AMARAMIT - THE LEGEND என்ற புத்தகத்தில் மூன்றாம் பகுதியில், Amaramit - The Legend - Part III போதைக்கடத்தல் கும்பலின் cartel தலைவனை அமெரிக்காவின் CIA வின் contract படி, சர்வதேச கொலைகாரனான நமது தமிழகத்து கதாநாயகன் எவ்வாறு அந்த தலைவனை இலங்கைக்கு தந்திரமாக அழைத்து வந்து கொலை செய்கிறான் என்று முப்பது பக்கங்களுக்கு மேலாக எழுதியுள்ளேன். அவ்வாறு எழுதும் பொது போதைக்கடத்தலைப்பற்றி விரிவாகவே எழுதியுள்ளேன். நான் எழுதியது உணமையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். சம்பவங்கள் மட்டுமே கற்பனை.


Kasimani Baskaran
அக் 26, 2025 06:42

உக்ரைன் - ரஷ்யா பஞ்சாயத்து கடினம் என்று தாய்லாந்து - கம்போடியா இடையில் பஞ்சாயத்து செய்ய முயல்கிறார். அடுத்து வேறு வேலைகள் அதிகள் இல்லை என்பதால் கொலம்பியா மீது வன்மம்....


Subramanian
அக் 26, 2025 06:34

Did one of our political leaders visited this country recently?


சமீபத்திய செய்தி