உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு தயாரிப்பு கார்களுக்கு 25% வரி: அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

வெளிநாட்டு தயாரிப்பு கார்களுக்கு 25% வரி: அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரிகள் விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டு கார்களுக்கு அதிக வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக, ஓவல் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி முதல் 25% வரிகள் விதிக்கப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் வரி வசூல் துவங்கும். இந்த புதிய வரி விதிப்பு நிரந்தரமாக இருக்கப் போகிறது. அமெரிக்க பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் மேம்படுத்துவதே புதிய வரி விதிப்பின் நோக்கமாகும். இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இது நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத வளர்ச்சியைத் உருவாக்கும். வாகன கட்டணக் கொள்கையை வடிவமைப்பதில், டி.ஓ.ஜி.இ., குழு தலைவர் எலான் மஸ்கிற்குஎந்த தொடர்பும் இல்லை. வாகனங்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து எலான் மஸ்க் ஆலோசனை வழங்கவில்லை. புதிய வாகனத் துறை வரிகள் மிக விரைவில் வரும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

अप्पावी
மார் 27, 2025 10:09

25 பர்சண்ட் வரிகட்டி இறக்குமதியான கார் வாங்குவதை விட, உள்நாட்டு தயாரிப்பு கார்களை வாங்குவாங்க. அதற்காக உள்ளூர் மக்களின் வருமான வரியை வெகுவாகக் குறைக்கப்படும். இதனால் உள்ளூர் தயாரிப்பும், பணப்புழக்கமும் அதிகரிக்கும். தவிர, சீன தயாரிப்புகள் இப்போது மெக்சிகோவில் நடைபெறுகிறது. சீன தொழிற்சாலைகள் மெக்சிகோவிற்கு இடம் பெயர்ந்து விட்டன. சீனாவை அடக்க இதுமாதிரி டாரிஃப் தான் வழின்னு ட்ரம்ப் நினைக்கிறார்.


சுரேஷ்சிங்
மார் 27, 2025 10:02

புரிஞ்சு போச்சா... உங்களுக்கும் ஆத்மநிர்பார் பத்தி தெரிஞ்சு போச்சா.. இன்னும் நல்லா வருவீங்க.


KRISHNAN R
மார் 27, 2025 08:42

எல்லாம் சரி.... இப்படியே போனால் அந்நாடு தனிமை படுத்த பட வாய்ப்பு உள்ளது


Ramesh Sargam
மார் 27, 2025 08:28

அவர் நாட்டை காக்க அவர் எடுக்கும் முடிவு சரிதான்.


sankaranarayanan
மார் 27, 2025 08:17

டெஸ்லா கார் விற்பனைக்காக இலன் மாஸ்க்கிக்கு செய்யும் இவருடைய ராஜ துரோகம் நீதிமன்றம் சென்றால் இது நிற்காது இலன் மாஸ்க் இவர்க்கு பல மில்லியன் டாலர் கொடுத்தார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட முறை அதற்கு மக்களை இவர் வாட்டக்கூடாது


anonymous
மார் 27, 2025 08:08

இப்படியாக அமெரிக்க மக்கள் கார் வாங்கும் போது இந்த புதிய 25% வரியைக் கட்டுவார்கள். இது தான் மக்களுக்கு அதிபர் மூலமாக கிடைக்கும் சன்மானம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை